எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 16 புதிதாக 4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை (15.6.2017) நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

தமிழகத்தில் தொலைதூரப் பகுதி களில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.

புதுமையான கற்பித்தல் முறை களைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி என நான்கு பள்ளி களுக்கு விருது வழங்கப்படும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி களுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றி தழ்களும் அளிக்கப்படும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றி தழ்களும் கொடுக்கப்படும்.

மாணவர்கள் பொது அறிவு, மொழித் திறன்களை வளப்படுத்த பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் அளிக்கப்படும். 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு அவை வாங்கி கொடுக்கப்படும்.

காலிப் பணியிடங்கள்: பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியமிருப்பதால், நிகழ் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கனவு ஆசிரியர் விருது: கல்வி, பள்ளி மேலாண்மைச் செயல்பாடு களில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு “கனவு ஆசிரியர்’’ என்ற விருது அளிக்கப்படும். இந்த விருது ஆசிரியர் பாராட்டுச் சான் றுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை அடங்கியதாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறையில் 17 ஆயிரம் தாற் காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

உலகத் தமிழ் மாணவர்கள்

தாய்மொழி கற்க உதவி

உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்பித்தலுக் குத் தேவையான உதவிகள் செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனித்திறன் மாணவர்களுக்கு  வெளிநாட்டுப் பயண வாய்ப்பு

-அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் உள்ளிட்ட துறை களில் தனித்திறமையோடு விளங்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர். அவர்களில் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயண மாக அழைத்துச் செல்லப்படுவர். கலை, இலக்கியம், நுண்கலை உள் ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவில் போட் டிகள் கொண்ட ஒரு மாபெரும் மாண வர் கலை திருவிழா அறிமுகப் படுத்தப்படும்.

கல்விக் கடன் முகாம்கள்: தமிழ கத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி மய்யம் அமைக்கப்படும். ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த மய்யத் தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள உரிய அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட் டிக் கருத்தரங்குகள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் நடத்தப்படும்.

இணையவழி அனுமதி: மெட்ரி குலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறும் முறைகள் இணைய வழியாக்கப்படும். மேலும், அதன் நடைமுறைகள் எளிமையாக்கப் படும்.

கீழடியில் நூலகம்-

காட்சிக் கூடம்

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த, பொருள் சார்ந்த நூலகங்கள், காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும். சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம், காட்சிக்கூடம் ஆகியன சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்படும்.

தமிழிசை, நடனம், நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் சார்ந்து திருநெல்வேலி யிலும், பழங்குடியினர் பண்பாடு சார்ந்து நீலகிரியிலும், கணிதம், அறி வியல் சார்ந்து திருச்சியிலும், வானி யல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்து கோவையிலும், அச்சுக்கலை சார்ந்து சென்னையிலும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.

மதுரையில் மாபெரும் நூலகம்: மதுரையில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய மாபெரும் நூலகம் ஏற்படுத் தப்படும். இந்த நூலகம் குழந்தை களுக்கான தனிப்பிரிவு, போட்டித் தேர்வு பயிற்சி மய்யம், சுயநூல் வாசிப்புப் பிரிவு ஆகியன உள்ளடக் கியதாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக் கண் காட்சி நடத்தப்படும். கோவை, கரூர், வேலூர், திருச்சி, விருதுநகர், திருநெல் வேலி, நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்களைத் தொடர்ந்து, மீதமுள்ள 24 மாவட்டங்களிலும் அந்த மய்யங்கள் தொடங்கப்படும்.

மின் நூலகம்: அரிய நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் ஆகிய வற்றை மின்மயமாக்கி அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான அட்ட வணையினை உள்ளடக்கிய நவீன மின் நூலகம் அமைக்கப்படும்.

அரிய நூல்கள், ஆவணங்களை பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று பாதுகாத்து பயன்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழில் மொழிபெயர்ப்பு: சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படும். மேலும் உலகின் மிகச்சிறந்த பிற மொழி இலக்கியங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படும். பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்த கக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப் படும்.

உயர்கல்வித் துறை:

பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில்

89 புதிய பாடப் பிரிவுகள்

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை (ஜூன் 15) உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், உயர் கல் வித் துறை அமைச்சர் கே.பி.அன்ப ழகன் வெளியிட்ட புதிய அறிவிப் புகள்:

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் 24 புதிய உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்தக் கல்லூரி களில் 4 முதல் 5 பாடப் பிரிவுகள் மட்டுமே இப்போது உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் 89 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப் படுத்தப்படும்.

பொறியியல் மாணவர்களிடையே ஆசிரியர் பணி, ஆராய்ச்சி மேற் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் முதுநிலை பட்ட மாண வர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற 19 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பு மாண வர்களுக்கு, ரூ.2.94 கோடி செலவில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் சார்பாக தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றத்தின், மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்துக்கான நிதி ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

அதுபோல, இளம் மாணவ அறிவியலாளர்கள் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்பட 13 புதிய அறிவிப்புகளை உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.

திருநங்கைகளுக்கு

இலவச கல்வி

இனி திருநங்கைகளுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல் கலையில் இலவச கல்வி வழங் கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்பொழுது உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:  தமிழகத்தில் இனி உயர்கல்வி பயில விரும்பும்  திருநங்கைகளுக்கு, அனைத்து துறைகளிலும் நெல்லையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும்.

அத்துடன் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner