எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை, ஜூன் 24- சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வு நடைபெற்று வரு கிறது. கீழடி அகழாய்வு குறித்து பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளநிலை யில்,சென்னையைச்சேர்ந்த வழக்குரைஞர்கனிமொழி மதி என்பவரும், கீழடியில் அருங்காட்சியகம்அமைக்கக் கோரி வழக்குத் தொடுத்திருந் தார்.

அவரது மனுவில், கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் இதுவரை 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத் துள்ளன. அப்பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்த மத்திய தொல் லியல் துறை முடிவு செய் துள்ளது.

இதற்குதடைவிதித்து, கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு வின் மீதான விசாரணை நீதி பதிகள்செல்வம்மற்றும் ஆதி நாதன் அமர்வு முன்பாகவெள் ளியன்றுவிசாரணைக்குவந் தது. தமிழர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும்கடமைதமிழக அரசுக்கு உண்டு. அருங்காட்சிய கம் அமைக்கும் பணியில் தமிழக அரசுக்கும் பங்கிருக்க வேண்டும். இடம் கொடுத்தால் மட்டும் போதாது. வேறு பல உதவிகளையும் மாநில அரசு வழங்கவேண்டும் எனவும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவும் அதற்கான முதற் கட்ட பணிகளைத் தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து வழக்கின் விசார ணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அருங் காட்சியகப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner