எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 1 சரக்கு -  சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடை முறை நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சில பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர வாய்ப்பிருந்தாலும், வரிஏய்ப்பு நடவடிக்கைகளும், கருப்புப் பணப் பரவலும் முழுமையாகத் தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுவரை பல்வேறு வகையான சரக்குகளுக்கும், பொருள்களுக்கும் விதிக்கப்பட்டு வந்த வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்தது. இதைத் தவிர, மதிப்புக் கூட்டு வரி, மத்திய வரி, மாநில வரி, உபரி வரி என பல்வேறு வரிவிதிப்பு நடைமுறைகளும் வழக்கத் தில் இருந்தன.

இந்த நடைமுறையை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப் பைக் கொண்டுவர கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டது.

1986-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், வரிச் சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவ தாக அறிவித்தார்.

அதன் பிறகு மத்தியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால் அந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 2000- இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து முதன்முதலில் பேசப் பட்டது. அதைத் தொடர்ந்து, இதுகுறித்த மசோதாவை வகுக்க தனிக்குழு அமைக் கப்பட்டது. பிறகு அது திருத்தியமைக் கப்பட்டது.

பாஜகவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அதில் மேலும் பல மாற்றங்களைச் செய்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காட்சி களும் மாறின. காங்கிரஸ் ஆட்சியின் போது ஜிஎஸ்டியை பாஜக எதிர்ப்பதும், பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்துவதும் என நிலை இருந்தது.

இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த தீவிர முயற்சி களை முன்னெடுத்தது. அதன் விளைவாக, 17 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு  அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்ணயிக்கப்பட்ட புதிய வரிவிகிதம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அந்த வரிவிகிதமானது 5, 12, 18, 28 என நான்கு வகைகளாக விதிப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தப் புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக வர்த்தகர் களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணுமாறும், தேவையான உதவிகளை வழங்குமாறும் வணிக வரித் துறை அதி காரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது. இதற்காக மண்டல வாரியாக ஜிஎஸ்டி சேவை மையங்களை அமைக் குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நடுவே ஜூலை 1- ஆம் தேதியை ஜிஎஸ்டி தினமாக கடைப்பிடிக்கப் போவதாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner