எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 1 இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ் நாடு) பொதுச்செய லாளர் சி.பி.கிருஷ் ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் வங்கி சங்கங்களின் கூட்ட மைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு நிதி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதாவை (2017) கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கக் கூடாது. பெரு நிறுவனங்களின் வராக் கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வங்கி கிளைகளை மூடக்கூடாது. வங்கி பணிகளை வெளி ஆட்களுக்கு விட கூடாது. வாடிக்கையாளர் களை கசக்கிப் பிழியும் சேவை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 22-ஆம் தேதி ஒருநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த போராட்டங்களுக்கு பிறகும், மத்திய அரசு தனது மக்கள் விரோத போக்கை கைவிடாவிட்டால் அக்டோபர், நவம்பர் மாதத்தில் 2 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.