எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 25 அப்துல் ரகுமான் என்ற தனி மனிதரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், கவிக்கோ என்ற தமிழினப் போராளியை நாம் இழக்கவில்லை என அவரின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி  அவர்கள் புகழாரம் சூட்டினார்.
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் கூட்டம் இசுலாமிய இலக்கியக் கழகம் சார்பில் நேற்று (24.7.2017) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப் பட இயக்குநர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கவிக் கோவின் நினைவுகள், தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பலரும் இந்த விழாவில் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:

அப்துல் ரகுமான் என்ற தனி மனிதனை நாம் இழந்திருக்கலாம். ஆனால், கவிக்கோ என்ற தனித்துவம் வாய்ந்த தமிழினப் போரா ளியை இழக்கவில்லை. கட்டுரை, கவிதை என எதை எழுதினாலும், தனித்துவமாகவே திகழ்ந் தார். கவிக்கோவின் கட்டுரைகள், கவிதைகள் காலத்தால் அழியாதவை.

மதம் என்பது மார்க்கம் என்பது மாறி, பல மதங்களுக்கு இடமில்லை; என் மதத்துக்குதான் இடம் உண்டு என்று சொல்லும் இந்த காலக் கட்டத்தில், கவிக்கோ போன்ற அறிவாயுத தொழிற்சாலைகள் இல்லையே என்று வருத்தப் பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

அறிவுப் போர், கருத்துப் போர், மொழிப்போர் நடக்கவேண்டிய இந்த காலத்தில் கவிக்கோ இல்லை. ஆனால், அவர் கொடுத்த கவிதைகள் இருக்கின்றன. அந்த கவிதைகள், எழுத்து களுடைய கோர்வைகள் அல்ல. நம் உரிமைக் கான போர்க் கருவிகள். அந்த கருவியை நாம் என்றைக்கும் பயன்படுத்த கவிக்கோ உறுதுணை யாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹி ருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பேராசிரியர் அருணன், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, எஸ்டிபிஅய் கட்சித் தலைவர் தெஹ்லான் பாகவி, முன்னாள் எம்.பி.யான எம்.அப்துல் ரகுமான், பாத்திமா முஸாபர், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரும் கவிக்கோவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடை பெற்றது.

இசுலாமிய இலக்கியக் கழகத் தலைவர் முகமதலி, பொதுச்செயலாளர் எம்.அப் துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான் பேரா.ஹாஜாகனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.