எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 28- திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.7.2017) கோவை விமான நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வழி யில், சேலம் பைபாஸ் அருகில் உள்ள கணியூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, முன்னறிவிப்பு எதுவுமின்றி காவல்துறையால் தடுத்து நிறுத் தப்பட்டு, உரிய ஆணையின்றி கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தமி ழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த திமுகவினர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களின் கைதை கண் டித்து பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டனர். இதனை யடுத்து, மாலை 4.30 மணிய ளவில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள குதிரை பேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்பதற்கு இன்று நடைபெற் றுள்ள சம்பவமே தெளிவான சாட்சியமாக அமைந்திருக்கின் றது. நீட் தேர்விலிருந்து தமி ழகத்துக்கு விதி விலக்கு அளித் திட வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் இரு மசோ தாக்கள் ஏகமனதாக நிறைவேற் றப்பட்டும், அவை குடியரசுத் தலைவர் அவர்களுக்குச் சென்று சேரவில்லை என்ற திடுக்கிடும் செய்தி பிறகு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, இதுதொடர்பாக நாங்கள் பிரத மரையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகி றோம், என்று ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
செய்தியாளர்: நீங்கள் கைது செய்யப்பட்டதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்திருக் கிறார்கள். அனைத்துக் கட்சி களை கூட்டி ஏதாவது போராட் டம் நடத்துவீர்களா?

மு.க.ஸ்டாலின்: இன்றைக்கு எங்களுடைய போராட்டத்தை நசுக்க வேண்டுமென்று முயற் சிக்கின்ற சூழ்நிலையினைப் பார்க்கின்றபோது, இந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று நான் நிச்சயமாக சொல்ல முடியும். இந்தப் போராட்டம் இன்றோடு முடிந்து விடுகின் றப் போராட்டமல்ல, நிச்சய மாக தொடரும். நீட் தேர்வுக்கு எப்போது விதி விலக்கு கிடைக்கின்றதோ, அதுவரையி லும் இப்படிப்பட்ட போராட் டங்களை திராவிட முன்னேற் றக் கழகம் முன்னின்று பல் வேறு கோணங்களில் நடத்தும் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படி நடத் துகின்ற போராட்டங்களுக்கு, எந்தெந்த கட்சிகள் ஆதரவு தருகின்றனவோ, அவர்களின் ஆதரவினை நாங்கள் நிச்சய மாக பெற்று, அந்தப் போராட் டங்களை முன்னெடுப்போம்.

செய்தியாளர்: தமிழகத்தில் பெட்ரோகெமிக்கல் கொண்டு வருவது குறித்து உங்கள் கருத் தென்ன?

மு.க.ஸ்டாலின்: அதை ஏற் கனவே கண்டித்திருக்கிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சர், அவர்கள் அனுமதி கேட்டிருக்கிறார்கள், ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை, என்று சொல்லியிருக்கிறார். எல்லாவற்றிலும் இரட்டை வேடம், கபட நாடகம் என்று தான் இந்த ஆட்சியில் நடந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித் தார்.