எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.7 சென் னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் எஸ்.காமேஸ்வரனுக்கு தேசிய மருத்துவ அறிவியல் அகாதெமி (என்ஏஎம்எஸ்) சார்பில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சென் னையில் நேற்று (6.8.2017) நடை பெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ அறிவியல் அகாதெமியின் முன்னாள் தலைவர் பிரேமா ராமச்சந்திரன், செயலர் தீப் நாராயணன் சிறீவத்சவா தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் காமேஸ்வரனுக்கு (வயது 94) இந்த விருதை வழங்கி சிறப்பித்தனர்.

அந்தத் துறையில் மருத் துவர் எஸ்.காமேஸ்வரன் நீண்ட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சிகள், சிகிச்சை, மருத் துவத் துறைக்கு ஆற்றிய பணிகள் ஆகியவற்றைப் பாராட்டி இந்த விருது வழங் கப்படுவதாக பிரேமா ராமச் சந்திரன் தெரிவித்தார். வாழ் நாள் சாதனை விருது பெற்ற எஸ்.காமேஸ்வரன் சென்னை மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநராக பொறுப்பு வகித் துள்ளார். அந்தத் துறையில் இந்தியாவில் முதன் முதலாக ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்த நிகழ்ச்சியில் பிளாஸ் டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வெங்கடசாமி, சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஏ.ராஜ சேகரன், சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை யின் தலைவரும் மருத்துவஅறிவியல் அகாதெமியின் உறுப் பினருமான டாக்டர் மோகன் காமேஸ்வரன், நிர்வாக இயக் குநர் இந்திரா மோகன் காமேஸ் வரன், வாசுகி கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருது பெற்ற எஸ்.காமேஸ் வரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner