எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலவச வேட்டி - சேலை கொள்முதல்

சட்டப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படவில்லை-

டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக.14 இலவச வேட்டி - சேலை தயாரிப்புக்கான, நூல் கொள்முதல், 'டெண்டர்' அறிவிப்பை, சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

விருதுநகர் மாவட்டம், சோழ புரத்தைச் சேர்ந்த, வெங்கட்ராம் ஸ்பின்னர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

நூல் உற்பத்தித் தொழிலில் உள்ளோம். நூலில் சாயம் ஏற் றுவதற்காக, மும்பையில் உள்ள, சாயப் பட்டறை யூனிட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். பொங் கல் பண்டிகைக்காக வழங்கப் படும், இலவச வேட்டி - சேலை தயாரிக்கத் தேவைப்படும் நூல் கொள்முதல் செய்வதற்கான, டெண்டர் அறிவிப்பை, 2017 ஜூனில், அரசு வெளியிட்டது. டெண்டர் நிபந்தனையாக, 'கழிவு நீரை வெளியேற்றாத நிறுவனம்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தின் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களில் இருந்து...

தமிழகத்தில் மட்டும்தான், கழிவுநீரை வெளியேற்றாத யூனிட்டுகள் உள்ளன. இதர மாநி லங்களில் உள்ள நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றாத நிறு வனம் என, சான்றிதழ் பெற முடியாது. மகாராட்டிராவில், சாயப் பட்டறைகளின் கழிவுநீர், கடலுக்குள் வெளியேற்ற அனு மதிக்கப்படுகிறது. அதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒப்புதல் சான்றிதழும் அளிக்கிறது. எனவே, டெண்டர் நிபந்தனையை வலியுறுத்தாமல், இதர மாநிலங் களில் இருந்து பெறப்படும் ஒப்பந்தப் புள்ளிகளை, அரசு பரிசீலிக்க வேண்டும். அதுவரை, டெண்டர் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதே போல், முருகானந்தம் என்பவரும், மனு தாக்கல் செய்தி ருந்தார்.

மனுக்களை விசாரித்த, நீதி பதி, எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நூல் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு, 2017 ஜூன், 22 இல் வெளியானது;

ஒப்பந்த விலைப் புள்ளி சமர்ப்பிக்க, 2017 ஜூலை, 7 கடைசி தேதி. டெண்டர் அறி விப்பு, பத்திரிகைகள் மற்றும், 'டெண்டர் புல்லட்டினில்' வெளியிடப்பட்டது. திறந்தவெளி டெண்டர் சட்டம் விதிகளின்படி, 50 கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் இருந்தால், அதற் கான டெண்டர் நோட்டீசை, வர்த்தக இதழில் வெளியிட வேண்டும். ஆனால், 2017 ஜூன், 22 ஆம் தேதியான டெண்டர் அறிவிப்பு, இந்திய வர்த்தக இதழில் வெளியிடப்படவில்லை. சட்டப்படி, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படாததால், அந்த முகாந்திரத்தின் அடிப்படையிலேயே, இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படக் கூடியது.

மேலும், டெண்டர் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, அதை சமர்ப்பிக்க, 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண் டும்; ஆனால், 15 நாள்களாக குறைக்கப்பட்டு உள்ளது. முந் தைய ஆண்டுகளில் குறைக்கப் பட்டிருக்கிறது என்பதற்காக, அதை முன்னுதாரணமாக எடுத்து, தற்போதும், 30 நாள்கள் அவகாசத்தை குறைக்க முடியாது. அவகாசத்தை குறைப்பதற்கான காரணம், ஏற்றுக் கொள்ளக் கூடி யதாக இருக்கவேண்டும்.  , 30 நாட்கள் அவகாசம் இருக்கவேண் டும் என்கிற போது, அதைப் பின்பற்ற வேண்டும்.

ஆனால், முந்தைய ஆண்டு களில் குறைக்கப்பட்டு உள்ளது என்பதை தவிர, வேறு எந்த காரணத்தையும், கைத்தறித் துறை இயக்குநர் கூறவில்லை. எனவே, 2017 ஜூன், 22 ஆம் தேதியிட்ட டெண்டர் அறிவிப்பு, ரத்து செய் யப்படுகிறது. அதனால், டெண் டர் நிபந்தனைகளின் தகுதியை ஆராய, எந்தக் காரணமும் இல்லை. சட்டப்படி, புதிய டெண்டரை அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner