எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈரோடு, ஆக. 16 ‘‘கல்வியில் தமிழ் வளர்ந் தால் மட்டுமே மொழி வளரும். அல்லது, தமிழை ஆவணம் செய்யும் கடைசி தலைமுறையாக நாம் இருப்போம் என்பது வருத்தத்துக்குரியது'' என, இலங்கை வானொலி நிலைய தொகுப்பாளர் பி.எச்.அப்துல் அமீது பேசினார்.

ஈரோட்டில் நடந்து வரும் புத்தகத் திருவிழா சொற்பொழிவில், உதவிப் பேராசிரியர் சந்திரசேகருக்கு ஜி.டி.நாயுடு விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை, மேற்கு மண்டல அய்.ஜி., பாரி வழங்கினார்.

பின், ‘தமிழ் இனி' என்ற தலைப்பில், இலங்கை அப்துல் அமீது பேசியதாவது:

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் மரியா சுமித் என்ற பெண், ‘ஏக்' என்ற மொழியை அவரது தங்கையுடன் மட்டும் பேசி வந்தார். அவரது, 10 குழந்தைகளுக்கும் ஆங்கிலம்தான் தெரியும். சில ஆண்டு களுக்கு முன், அந்த சகோதரியும், பின், மரியா சுமித்தும் இறந்தனர்.

அவர் இறக்கும் முன், ஒரு மொழி யாளரைக் கொண்டு, ‘ஏக்' மொழியை எழுதி, அதற்கான அகராதி, இலக்கணத்தை எழுதி சென்றார். ஆனால், இன்று ஒருவர் கூட அம்மொழி பேசுவோர் இல்லை. அதேபோல, அம்மாநிலத்தில் விரைவில் அழியும் நிலையில், 20 மொழிகள் உள்ளன.

புத்த மகான் பேசிய பாலி, சீசர் பேசிய லத்தீன், ஏசுவின் அரமை என பல மொழி கள் அழிந்து வருகிறது.

உலகில் உள்ள, 6,000 மொழியில், இன்னும், 100 ஆண்டில், 600 மொழி மட் டுமே இருக்கும் என்கின்றனர். இந்த, 6,000 மொழியில், 3,000 பேர் மட்டுமே பேசும், 1,000 மொழி, 1,000 பேர் மட்டுமே பேசும், 1,500 மொழி, தலா, 10 பேர் மட்டுமே பேசும், 500 மொழிகள் உள்ளன.

உலகின் ஆதி மொழியான தமிழும் அழியும் நிலையில்தான் உள்ளது. அதை காக்கத் தவறினால், தமிழை ஆவணப் படுத்தும் கடைசி தலைமுறையாக நாம் இருப்போம் என்பது வருத்தத்துக்குரியது.

அய்.நா.,வின் கல்வி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இன்னும், 30 ஆண் டில் அழியும் மொழியாக தமிழ் உள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழ் அழிவதற்கு ஊடகங்களான பத் திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைத்துறையும் முக்கிய காரணமாகும். ஆங்கில கலப்பால், தமிழ் பயன்பாடு குறைகிறது.

பிற நாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் கூட, வன்முறை, தவறான கருத்துகளை பிரதிபலிப்பதாகவே அமைகிறது. ‘பொதிகை' தொலைக்காட்சியில் கூட, ‘பெஸ்ட் ஆப் மிட்நைட்’ என நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

எந்த நாட்டினராக இருந்தாலும், ரஷ்யாவில் கல்வி பயிலச் சென்றால், முத லாண்டில், ரஷ்ய மொழியை கற்க வேண் டும்.

ஆனால், நமது நாட்டின் கல்வியில், தமிழ் அந்த நிலையில் இல்லை. எனவே, பள்ளி கல்வியும், உயர் கல்வியும் தமிழில் இருக்கவேண்டும். பன்மொழி திறனை வழங்குவது தவறில்லை. ஆனால், தமி ழில் மட்டுமே கல்வி அமைய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தாவிட்டால், தமிழை அழியாமல் காப்பது சிரமம்.

இவ்வாறு அவர் பேசினார்.