எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.26  சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரே நாளில் இருபெரும் மாநாடுகளாக காலையில் மாநில அதிகார மீட்பு மாநாடும், மாலையில் இந்தி, சமஸ் கிருதத் திணிப்பு கண்டன மாநாடும் வெகு எழுச்சியுடன் சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 25.8.2017 அன்று நடைபெற்றது.

காலையிலும், மாலையிலும் பங் கேற்று உணர்ச்சிமிக்க உரையாற்றிய தலைவர்கள் கழகத்தின் முயற்சிக்கும், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அத்துணை முடிவு களுக்கும் உறுதுணையாக இருந்து வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறினார்கள்.

மாலையில் நடைபெற்ற இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாட் டில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை யாற்றினார். வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று எழுச்சியுரையாற்றினார்.

"பெரியார் கொட்டிய முரசு"

நூலை வெளியிட்டு

தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை

மாநாட்டையொட்டி, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்தளித்த நூலாகிய "பெரியார் கொட்டிய முரசு"  நூலை வெளியிட்டு, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மாநில செய லாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதின்,  விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், தமிழ் நாடு  காங்கிரசு கட்சி செய்தி தொடர் பாளர் எஸ்.எம்.இதயதுல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செய லாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள். மும்பை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தீபக் பவார் ஆங்கிலத்தில் உரையாற்றி யதை அடுத்து திராவிடர் கழக வெளி யுறவு செயலாளர் வீ.குமரேசன் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் Ôஜாதி ஒழிப்பு புரட்சிÕ என்ற நூலை வழங்கினார்.

மாநாட்டின் நிறைவாக மாநாட்டுத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நிறை வுரையாற்றினார்.

ஒரேநாளில் நடத்தப்பட்ட இரு பெரும் மாநாடுகளின் நிறைவாக பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. தீர்மானங்களை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் வாசித்தார். மாநாட்டில் பங் கேற்றவர்களின் பலத்த கரவொலிகளுக் கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இ.இன்பக் கனி நன்றி கூறினார்.

Ôபெரியார் கொட்டிய முரசுÕநூலினை திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். ரூ.120 மதிப்புள்ள நூல் மாநாட்டில் ரூ.100க்கு வழங்கப்பட்டது. உரிய தொகை கொடுத்து ஏராளமான வர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண் டார்கள்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

மேனாள் மேயர் சா.கணேசன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவி ஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல் லதுரை, செல்வம், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், வழக்குரைஞரணி அமைப் பாளர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, அமுத ரசன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், செந்துறை இராசேந்திரன், தங்க.தனலட்சுமி, வட சென்னை மாவட்ட மகளிரணி செய லாளர் பொறியாளர் இன்பக்கனி, வட சென்னை மாவட்ட பாசறை மரகதமணி, பவானி, சென்னை மண்டல இளை ஞரணி ஆ.இர.சிவசாமி, திண்டிவனம்  தா.தம்பி பிரபாகரன், தாம்பரம் மாவட் டச் செயலாளர் கோ.நாத்திகன், ஆடிட் டர் இராமச்சந்திரன், சூளைமேடு இராமச்சந்திரன், கொரட்டூர் பன்னீர் செல்வம், செங்கற்பட்டு சுந்தரம், ஆதம் பாக்கம் சவரியப்பன், கெடார் மூர்த்தி, பெரியார் பிஞ்சு அ.கு.தமிழ்த்தென்றல் உள்பட ஏராளமானவர்கள் உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து நூல் களைப் பெற்றுக்கொண்டார்கள்.

கலந்துகொண்டவர்கள்

காலையிலும் மாலையிலும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், காங்கிரசு  உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் பொறுப்பாளர்கள், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளை ஞரணி, மாணவரணி, வழக்குரைஞரணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராள மானவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் இரவிச்சந்திரன் மற்றும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திரு வள்ளுவர், பேராசிரியர் ராமு,  பேரா சிரியர் திருக்குறள் க.பாசுகரன், எழுத் தாளர் மஞ்சைவசந்தன், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மா.சேரன், சிந்தாதிரிப்பேட்டை மாறன், பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண் ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் பார்த்திபன்,  விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், விழுப் புரம் மண்டல இளைஞரணித் தலைவர் இளம்பரிதி, திண்டிவனம் மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை,  சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் அம்பத்தூர் சிவக்குமார், அமைப்பாளர் உடுமலை வடிவேல், வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம்,   மங்கள புரம் பாசுகர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.கோபால், கலைத்துறை அமைப்பாளர் செ.கனகா, சி.வெற்றிசெல்வி, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன்,  தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ்சாக்ரட்டீஸ், செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், மயிலை டி.ஆர். சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோ தரன், தமிழ்செல்வம், இரா.பிரபாகரன், மகேந்திரன், முகிலன், பொறியாளர் ஈ.குமார், பழ.சேரலாதன், ஆதம்பாக்கம் சவரியப்பன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன், சுரேஷ், பாசு.ஓவியச் செல்வன், புழல் இரணியன், எண்ணு£ர் பிரித்விராஜன், அம்பத்தூர் நகர செய லாளர் ஏழுமலை,  இராமலிங்கம், முகப்பேர் முரளி, செல்வி, மோகனபிரியா, சைதை எத்திராஜ், நங்கைநல்லூர் தமிழினியன், விடுதலைநகர் செய ராமன்,  வழக்குரைஞர் சென்னியப்பன், மருத்துவர் க.வீரமுத்து, பெரியார் மாணாக்கன், கலைச்செல்வன், செஞ்சி ந.கதிரவன், பூவை செல்வி, கோட் டீசுவரி, வெண்ணிலா கதிரவன், ஞான தேவி, அருள்மதி, ஆவடி மோகனப்ரியா, பெலா. முனு.தமிழ்செல்வி,   சேத்பட் பாபு, சைதை மதியழகன், நுங்கை சிறீராம், அருள், கலைமணி, கலை யரசன், சுரேஷ், பார்த்திபன், கலைமதி, சீர்த்தி, இனநலம், தொண்டறம், நதியா, இன்பவல்லி, குமார்,  த.காவ்யா, பெரியார் பிஞ்சு கனிமொழி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண் டார்கள்.

மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையைக் கேட்க மாநாடு முடியும்வரை அனைவரும் காத்திருந்து உரையைக் கேட்டு பயன் பெற்றனர்.

ஒரே நாளில் இருபெரும் மாநாடு களாக மிகச்சிறப்பான ஏற்பாட்டின்படி எழுச்சியுடன் நடைபெற்ற மாநில அதிகாரம் மீட்பு இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக் கண்டன மாநாடுகளில் உரை யாற்றிய அத்துணைத் தலைவர்களின் உரையும் இந்தி, சமஸ்கிருதத் திணிப் புக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்துவதாக அமைந்தது.

மத்திய அரசின் அடாவடியாக இந் துத்துவாத்  திணிப்புகளுக்கு எதிராக தமிழினம் கிளர்ந்து எழுந்து, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற மாநா டாக, போர்ப்பரணி பாடிய மாநாடாக அமைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner