எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கூடங்குளம் அணு உலையில் முதலாவது பிரிவில்

4 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி, ஆக.29 கூடங்குளம் அணு உலையில் முதலாவது பிரி வில் மின் உற்பத்தி தொடங்கி யுள்ளது. எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலை யில் 137 நாட்களுக்கு பின்பு நேற்று மீண்டும் மின் உற்பத்தி காலை 6.37 மணிக்கு தொடங்கி யுள்ளது. வழக்கமாக ஒரு அணு உலையில் வருடந்தோறும் அத னுடைய எரிந்த எரிபொருட்கள் மாற்றும் பணிகள் நடைபெறும். இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் உள்ள எரிபொருள் மாற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

அதுவரை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 14146 மில்லி யன் மின் உற்பத்தி செய்யப்பட்டி ருந்தது. இந்த நிலையில் பல் வேறுகட்ட ஆய்வு பணிகளுக்கு பின்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியும் அளித் தது. அதனை தொடர்ந்து 24 ஆம் தேதியே அணு பிளவு தொடர் வினையும் தொடங்கியது. அத னையடுத்து நேற்று அதிகாலை முதல் அதிகாலை முதல் கூடங் குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்னும் 2 நாள்களுக்குள் அதன் மின் உற்பத்தி அளவு 700 மெகாவாட் அளவை எட்டிவிடும் என கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் கூடு தலாக 400 மெகாவாட் மின்சாரம் கூடங்குளம் அணு மின் நிலை யத்தில் முதல் அணு உலையில் இருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 2 ஆம் அணு உலையில் உள்ள ஜெனரேட்டர் பாகத்தில் ஏற்பட்ட பழுது கார ணமாக அந்த 2 ஆம் அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக் கிறது. இதில் ஜெனரேட்டரின் உதிரி பாகங்கள் மாற்றும் பணி கள் தற்போது நடைபெற்று வருவ தாகவும் அணு மின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

போலி இருப்பிட சான்று கொடுத்ததாகப் புகார்

4 கேரள மாணவர்களிடம் விசாரணைசென்னை, ஆக.29 போலி இருப் பிடச் சான்று கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட கேரள மாண வர்கள் 9 பேரில் 4 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தினர்.

ஆக. 24- இல் தொடங்கியது

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, சென்னை அரசு பன் னோக்கு மருத்துவமனையில் ஆக. 24- இல் தொடங்கியது. இந் நிலையில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிடச் சான்று பெற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள் ளனர்.

இதேபோல் கேரளா உள் ளிட்ட பலவேறு மாநிலங்களைச் சேர்ந்த 150 மாணவர்கள் தமிழ கத்தில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த மாணவர்கள்மீது சட்ட நட வடிக்கை எடுக்கவேண்டும் என, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆக.24- இல் விழுப்புரம் மாவட் டம் தலைமை குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக் குரைஞர் ஒய்.அம்ஜத் அலி புகார் கொடுத்திருந்தார்.

நான்கு மாணவர்களுக்கு இடம்

இதுகுறித்த விசாரணைக்கு காவல் ஆணையர் ஏ.கே. விசுவ நாதன் உத்தரவிட, மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் கபிலன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அவர்கள், தமிழக தரவரிசைப் பட்டியில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், மற்ற மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள னரா என்று ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஒதுக்கீட்டில்

எம்பிபிஎஸ் இடம்

இதற்கிடையில் போலியான இருப்பிடச் சான்று கொடுத்து விண்ணப்பித்ததாக புகார் அளிக் கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்களில் 4 பேருக்கு கலந் தாய்வில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது. 4 மாணவர்களில் 3 பேர் அரசு மருத்துவக் கல்லூரி களில் எம்பிபிஎஸ் இடமும், ஒருவர் தனியார் மருத்துவக் கல் லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடமும் பெற்றனர்.

இந்நிலையில் கேரள மாண வர்கள் 9 பேரில் 4 பேரை நேற்று அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காவல்துறை அதி காரிகளிடம் கேட்டபோது, விசாரணையில் இருப்பதால் முழு தகவல் வெளியிட இய லாது. மேலும் குற்றம் சாட்டப் பட்ட மீதம் உள்ள மாணவர்கள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போலி இருப்பிடச் சான்று அளித்திருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி, வட் டாட்சியர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மோசடி நிரூ பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

என்ன நடவடிக்கை?

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர். இந்த பிரச்சினையில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. போலி இருப்பிடச் சான்று கொடுத்ததாக புகார் கூறப்பட்ட கேரள மாண வர்கள் 9 பேரில் 4 பேர் கலந் தாய்வில் பங்கேற்று, இடங் களையும் பெற்றுவிட்டனர். தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்து, சான்றுகளும் சரிபார்க் கப்பட்ட பிறகுதான், அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமில்லை என்று கூறிவிட்டனர். இப்பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று மத்திய சுகாதார சேவைக் கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்), இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஅய்), மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவைதான் முடிவு செய்ய வேண்டும் என் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner