எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.31 சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் பட்டினிப் போராட் டம் 26-.08-.2017 அன்று சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச்செய லாளர் இரா.மோகன் தலைமை வகிக்க, ஏ.அய்.டி.யூ.சி தொழிற் சங்க மாநிலத் தலைவர் மூர்த்தி தொடங்கிவைத்தார். 1954 ஆம் ஆண்டில், சென்னை பத்திரி கையாளர் சங்கத்தை நிறுவிய வர்களில் ஒருவரான மூத்த பத் திரிகையாளர் ராமையா கலந்து கொண்டு உரையாற்றினார்.

சங்க நிர்வாகிகள் முருகே சன், எல்.ஆர்.சங்கர், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் மனோகரன், மாதவன்  (தி இந்து பிசினஸ்லைன்), ‘தீக் கதிர்’ பாலு, அ.குமரேசன், நெல்லை பாரதி, சேது ராம லிங்கம், ஹாசிப், மணிகண் டன், சுந்தரபுத்தன், இரா.சக்தி வேல், மூத்த தொழிற்சங்கத் தலைவர் நெய்வேலி பாலு, வழக்குரைஞர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பொரு ளாளர் மணிமாறன் தொகுத்து வழங்கினர். இறுதியாக திரைப் பட இயக்குநர் கவுதமன் குளிர் பானம் கொடுத்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இப்போராட்டத்தின் முடி வில் பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :

கர்நாடகா, கேரளா, ஆந் திரா, தெலங்கானாவைப் போல் பிரஸ் அகாடமி அமைக்க வேண்டும்.

வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக் கப்படும் 3 விழுக்காடு வீடு களை 10 விழுக்காடாக அதி கரிக்க வேண்டும்.

தமிழக அரசு 1990 ஆம் ஆண்டில் மானிய விலையில் பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தது போன்று கட்டித்தர வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு என தனி வாடகைக் குடியிருப் புகளை உருவாக்க வேண்டும், பத்திரிகையாளர்கள் ஓய்வூதி யம் பெறுவதில் உள்ள தடை கள் நீக்கப்பட வேண்டும்,   பணியின் போது உயிரிழக்க நேரிடும் பத்திரிகையாளர்களின் குடும்ப நல நிதியாக தற்போது வழங்கப்படும் ரூ.2 லட்சத்தை ரூ. 5 லட்சமாக உயர்த்திட வேண்டும். இதிலுள்ள விதி களை நீக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner