எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யா, அண்ணா அவர்களின் அடுத்த தலைமுறை

அவர்களின் கொள்கைகளை நாட்டிற்குக் கொண்டு செல்லுவோம்!

திராவிட இயக்கக் கொள்கைகளை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது

ஈரோடு சிலை திறப்பு விழாவில்  தமிழர் தலைவர் எழுச்சியுரை

ஈரோடு, செப். 2- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எடுத்துச் சொன்ன கொள்கைகளை அடுத்த தலைமுறை யினராகிய நாம் நாடெங்கும் கொண்டு சேர்ப்போம் என்று முழக்கமிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

31.8.2017 அன்று ஈரோட்டில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகள் புதுப் பிக்கப்பட்டு விழாவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தளபதியோடு நான் கலந்துகொள்வதில்  மகிழ்ச்சியடைகிறேன்

17.9.1971 ஆம் ஆண்டில் தந்தை பெரியாருடைய சிலையை இங்கு திறக்கும்போது கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். மீண்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிலை புதுப்பிக்கப்பட்டு அமைக்கப் பெற்றிருக்கிற விழாவில் தளபதியோடு நான் கலந்துகொள்வதில்  மகிழ்ச் சியடைகிறேன்.

ஒரு தலைமுறையினுடைய ஏற்றம் அடுத்த தலை முறையில் நிற்காது தொடரத்தான் செய்யும் என்பதற்கு இந்த விழா ஒரு அடையாளமாகும்.

திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கைகளும், சீலமும்கூட புதுப்பிக்கப்படுகின்ற தருணம்

இங்கே சிலை புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்கள், இங்கே சிலை மட்டும் புதுப்பிக்கப்பட வில்லை - இந்த திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கை களும், சீலமும்கூட புதுப்பிக்கப்படுகின்ற தருணம் இந்தத் தருணம்.

எனவேதான், இப்பொழுது மதவெறி, ஜாதிவெறி மற்றும் பதவி வெறி இவைகளெல்லாம் தலைதூக்கி ஆடக் கூடிய இந்தக் காலகட்டத்தில், பெரியாரும் - அண்ணா வும்தான் நமக்கு மாமனிதர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் மக்களைப் பார்த்து படி, படி என்று மனுதர்ம சமுதாயத்தை மாற்றியமைக்கச் சொன்னார்கள்.

எனவே, இந்த சிலையைத் திறக்க வரும்பொழுது, படி, படி என்று படிகளின்மீது ஏறித்தான் வரக்கூடிய அந்த சூழ்நிலையை, படிப்பதை ஞாபகப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது.

இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அன்றும் சரி, இன்றும் சரி என்றைக்கும் சரியாக இருக்கின்றன

அண்ணா அவர்கள் சொன்னார்கள், திராவிடர் கழகத் திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த நேரத்தில், இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று சொன்னார்கள். அந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அன்றும் சரி, இன்றும் சரி என்றைக்கும் சரியாக இருக்கின்றன என்பதற்கு அடையாளம்தான் பெரியார் சிலை - அதற்குப் பிறகு அண்ணா சிலை என்று அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, அய்யா அவர்கள் மறைந்தவுடன், அய்யா அவர்கள் வாழ்ந்த இடத்தை, நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில், முதல்வராக இருந்த நம்முடைய கலை ஞர் அவர்கள் கேட்டார்கள்.

உடனே அன்னையார் அவர்கள், எந்தவிதமான இழப்பீடு தொகை கொடுத்தாலும் வாங்கமாட்டோம் என்று சொன்ன நேரத்தில்,

பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக இருக்கவேண்டும்

அவரே ஒரு கருத்தைச் சொன்னார்கள், அண்ணா அவர்கள் அங்கேதான் குடியிருந்தார். ஈரோட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு. எனவேதான், தந்தை பெரியாருடைய நினைவு இல்லமாக மட்டும் இருக்கவேண்டாம் - பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக இருக்கவேண்டும் என்று இருவரையும் இணைத்தே சொன்னார்கள்.

திராவிட இயக்கக் கொள்கைகளை எந்தக் கொம்பனாலும் அழித்துவிட முடியாது

கலைஞர் அவர்கள் ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். எனவேதான், இன்றைக்கும், அரசால் நிர்வகிக்கப்படக் கூடிய அங்கே பெரியார் - அண்ணா இருவரும் இணைந்த நினைவு இல்லம். அதனைத் தாண்டி பன்னீர்செல்வம் பூங்காவிற்கு வந்தால், இங்கே பெரியார் - அண்ணா இருவரது சிலைகளும் பக்கத்தில், பக்கத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இவர்களுடைய கொள்கைகளை எந்தக் கொம்பனாலும் அழித்துவிட முடியாது என்பதற்கான அடையாளமாகத்தான் அடுத்த தலைமுறை - வாழ்கின்ற நாங்கள் அதை கொண்டு செல்வோம் என்று பெரியாரு டைய சுடரை ஓங்கிப் பிடிப்பதற்கு அண்ணா வந்தார்; அண்ணா தந்த சுடரை கலைஞர் பிடித்தார்; கலைஞர் செய்ததை தளபதி ஸ்டாலின் செய்கிறார் என்ற பெருமைக் குரிய ஒரு அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக் கிற இந்த நேரத்தில்தான், ஒன்றை ஒன்றை சொல்லிக் கொள்கிறோம்.

ஆட்சியைவிட, இந்த இனத்தின்

மீட்சி! மீட்சி!! மீட்சி!!!

இப்பொழுது தேவை ஆட்சியைவிட, இந்த இனத்தின் மீட்சி! மீட்சி!! மீட்சி!!! என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும் என்று சொல்லி, ஒலிபெருக்கியை தளபதியிடம் வழங்குகிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner