எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.28 தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமானமு.க.ஸ்டாலின்வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாணவ, -மாணவிகள் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளதை வரவேற்கிறேன்.

நூற்றாண்டுவிழாஎன்றபெயரில் மாணவ-, மாணவிகளை தொலை தூரங்களில் இருந்து கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வாகனங்களில் அழைத்து வந்து மணிக்கணக்கில் காக்க வைத்து, இங்கே கூடியிருக்கின்ற கூட்டமே இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று பொய் வேடம் புனைந்து வருகிறது இந்த குதிரை பேர அ.தி.மு.க. அரசு.

மாணவ,-மாணவிகளை இன்னல் களுக்கு உட்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் அமைந் துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு முழு மனதோடு வரவேற்கப்பட வேண்டிய தாகும். எதிர்காலத்தில் அரசு விழாக் களுக்கு,அதிலும்குறிப்பாகஇது போன்றஅரசியல்பேசும்விழாக்களுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவ தற்குஎந்தகல்விஅதிகாரிகளும்துணை போகக்கூடாது என்று கேட்டுக்கொள்கி றேன்.

இது ஒரு புறமிருக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்த நேரத்தில் வட சென்னையில்20குழந்தைகளைநிர்ப் பந்தப்படுத்தி அலகு குத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசார ணைக்கு உள்ளானது.

அந்த விசாரணையில் ஆணையமே உத்தரவிட்டும், வலுக்கட்டாயமாக அலகுகுத்துவதைவேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள்மீது நடவ டிக்கை ஏதும் எடுக்காமல், பெற்றோர் சம்மதத்துடன்தான் அந்த நிகழ்வில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரேவாதிட்டிருப்பதாகதேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித் திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குழந்தைகளின் மனித உரிமை மீறும் செயல்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற நினைப்பது வேதனைக்குரிய தாக அமைந்திருக்கிறது. ஆகவே 20 குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்த வைத்த வழக்கில் உச்ச நீதிமன்றமுன்னாள்தலைமைநீதி பதி தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத் தின் கடுமையான பிரிவுகளின் அடிப் படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.