எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.30- “ஜெயலலிதா மரணத்திலுள்ள பல உண்மை களை மறைத்துள்ள அமைச்சர்கள் அதனை வெளிக் கொணர எப்படி பொறுப்பேற்பார்கள்?” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (29.9.-2017) சென்னை, அறிவாலயத்தில் நேரில் சந்தித்த, தென் ஆப்பிரிக்காவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற மாணவி நிவேதா, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். இதனை யடுத்து, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

செய்தியாளர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அரசு முறைப்படி அறிக்கை தருமா? அல்லது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டுமா?

மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் இதுகுறித்து பலமுறை விளக்கம் கேட்டு, கேள்விக் கணைகளைத் தொடுத்து, இன்று கூட ஒரு கடிதத்தை வெளியிட் டிருக்கிறேன். அதில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில் இருக்கிறது.

செய்தியாளர்: ஜெயலலிதா மரணத்தில் பல உண்மைகளை மறைத்துள்ள இந்த அமைச்சர்கள் எல்லாம் அதற்குப் பொறுப்பேற்று, உரிய விளக்கம் கொடுப்பார்களா?

மு.க.ஸ்டாலின்: பொறுப்பே இல்லாத அமைச்சர்கள் எப் படி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? எதற்குமே லாயக்கற்ற, தகுதியற்ற அமைச்சர்களும், துணை முதலமைச்சரும், முதல மைச்சரும் தான் இன்றைக்கு இருக்கின்றனர்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner