எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வல்லம், நவ.18 தமிழ்நாடு இயக்குநரகம் மற்றும் திருச்சி தேசிய மாணவர் படை தலைமையிடம் கீழ் இயங்கிவரும் தஞ்சாவூர் 34 (த.நா) தேசிய மாண வர்படை சார்பில் அகில இந்திய தேசிய ஒருமைபாட்டு முகாம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் நவம்பர் 06 அன்று கர்னல் ஆர்.சிவநாதன்.தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் திருச்சி அவர்கள் தலைமையில் கர்னல் ஷைகத்ராய் ஆபிஸர் கமாண்டிங் 34 (த.நா) தே.மா.ப.தஞ்சாவூர் அவர்கள் மேற்பார்வையில் நடை பெற்று வருகிறது.

இப்பயிற்சியில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் 600 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வரு கின்றனர்.  இப்பயிற்சியில் அனைத்து மாநிலங்களின் பண் பாடு தொடர் பான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டி களும் நடைபெற்று வருகிறது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவர் படை  அலுவலர்கள், தேசிய மாணவர் படை பயிற்றுநர்கள் பங்கேற்று சிறப்பாக முகாமை வழிநடத்தி வருகின்றனர்.

மேலும் இப்பயிற்சி முகாமில் கங்கைகொண்ட சோழபுரம், தாரா சுரம்,  தஞ்சாவூர் ஆகிய இடங் களுக்கு சுற்றுலா சென்று வந்துள் ளனர். இந்த முகாம் எதிர்வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner