எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும், பெரியார் விருதுக்குரிய விண்ணப்பங்களுக்கான தமிழக அரசின் அறிக்கை, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் ‘பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் ஆகிய மக்களின் சமூக மேம் பாட்டுக்காக உழைத்தவர்கள், தங்கள் பெயருடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட வில்லை என்ற கருத்துக்கு அ.தி.மு.க அரசு வந் துள்ளதா? டாக்டர் அம்பேத்கர் விருது, தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும் தானா? வாழ்நாள் முழுவதும் ஜாதி - வர்ணாசிரமத்தை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்கள்மீது ஜாதி வர்ண முத்திரை குத்துவது எந்த அடிப்படையில் சரியானது? தந்தை பெரியாரை, இதைவிட வேறு எப்படி அவ மதிக்க முடியும்?’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ‘முதலமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் இப்படி யாரோ சில அதிகாரிகள் எழுதித் தருவதை விளம்பரப்படுத்துவதன் மூலம், நீங்காப் பழியை, அவமானத்தைத் தேடிக்கொள்ள லாமா? அ.தி.மு.க அரசு, பா.ஜ.க.வின் சட்டைப்பைக் குள் இருப்பதால்தான் இந்தத் தடுமாற்றமா? தமிழ்நாடு அரசு உடனே இதைத் திருத்தி தன் போக்கை மாற்றிக் கொண்டு, பொதுவாக சமூகநீதிக்காகப் பாடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பை மாற்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இல்லையெனில், உரிய முறையில் பரிகாரம் காணப்படும் என எச்சரிக்கிறோம்‘ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியர் வீரமணியின் இந்த அறிக்கை குறித்து, பெரியார் குறித்துத் தொடர்ந்து எழுதியும், பேசியும் இயங்கிவரும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர் களும் என்ன நினைக்கிறார்கள்?

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ‘‘ஆசிரியர் வீர மணியின் அறிக்கை வரவேற்கக்கூடியது. பெரியாரை, இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார் என்று சுருக் குவதன் விளைவுதான் இது. அவர், இட ஒதுக்கீட் டுக்காக மட்டும் போராடவில்லை. அம்பேத்கரைத் தலித் தலைவராகவும், பெரியாரை பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான தலைவராகவும் நிறுவ நினைப்பது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  இட ஒதுக் கீட்டுக்காக, பிற்படுத்தப்பட்டவர்கள்தான் போராடு வார்கள் என்பதும் தவறான பார்வை. மண்டல் கமிஷனில், உறுப்பினர் ஒருவரின் உடல்நலக் கு¬ பாடு காரணமாக, எல்.ஆர்.நாயக் என்கிற பட்டியல் சாதியைச் சார்ந்தவர் நியமிக்கப்பட்டார்.  அதற்கு முன்னர் தலித்துகள் அந்த கமிஷனில் கிடையாது. அவர், தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக  விரிவாகப் பேசியிருக்கிறார். அதன் உள்ளடக்கம் என்னவென்றால், ‘பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கக் கூடாது. தீண்டாமை என்ற ஒன்றைத் தவிர, எல்லா விதமான பாகுபாடுகளுக்கும் ஆளானவர்கள் பிற் படுத்தப்பட்டவர்களில் இருக்கிறார்கள். ஆகவே, பிற்படுத்தப்பட்டவர்களையே இரண்டாகப் பிரித்து, பிற்படுத்தப்பட்டவர்களில் பின்தங்கிய பிரிவினரை ‘Depressed Backward Classes'
எனப் பிரிக்க வேண்டும்' என்றும், `பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டில், 15 சதவிகிதத்தை ‘Depressed Backward Classes’ பிரிவினருக்கு வழங்கவேண்டும்' என்ற திட்டத்தையே முன் வைத்தார்.

அவர் ஒரு தலித்தாக இருந்தாலும், பிற்படுத்தப் பட்ட மக்களில் பின்தங்கிய வகுப்பினர்மீது கரிசனத்தோடு வலியுறுத்தியிருக்கிறார். ஆகவே, சமூகநீதிக்கான செயற்பாட்டாளர்களை எல்லைக்குள் சுருக்குவது என்பது விஷமத்தனம்'' என்று ஆசிரியர் வீரமணியின் அறிக்கைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

‘‘தமிழக அர சின் இந்த அறிக்கை, பெரி யாரின் பங்களிப் பைச் சுருக்குவ தாக இருக்கிறது. பெரியார், பார்ப் பனர் அல்லாத அனைவருக்கும் தலைவர்தான். தமிழக அரசின் இந்தப் பெரியார் விருது அறிவிப்பு, விஷமம் நிறைந் ததாக இருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்த பேராசிரியர் அ.மார்க்ஸ், “ரவிக்குமார் போன்றோர் நீண்டகாலமாகச் செய்துவரும் பிரச்சாரம் அர்த்த மற்றது. இதைத் தலித் நலனுக்காக இயங்குபவர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருக்கும் அவரைப் போன்றோர் அத்தகைய கருத்தைக் கொண்டிருக்கலாம். அந்தக் கருத்து, அந்தத் தனிநபரின் கருத்தாக மட்டுமே கொள்ள முடியும். பெரியார் விருது, தலித் செயற் பாட்டாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற ஆசிரியர் வீரமணியின் கோரிக்கை மிகச் சரியானது'' என்றார்.

 

திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் இது தொடர்பாகப் பேசியபோது,

‘‘தனக்கு  ஜாதி அபிமானம், தேசாபிமானம், மொழி அபிமானம் என எந்த அபி மானமும் இல்லை என்று கூறிய பெரியார், சமூகத் தொண்டில் ஈடு படும் எவர் ஒரு வரும் தன்னை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளக் கூடாது'' என்று வலியுறுத்தினார். அம்பேத்கர், தாழ்த் தப்பட்டவர்களுக்காக மட்டும் பாடுபடவில்லை;. ஒடுக்கப்பட்ட அனைவருக் காகவும், பிற்படுத்தப்பட்ட வர்கள், குறிப்பாக பெண்களுக்காகப் பாடுபட்டார். அவர் கொண்டுவந்த சட்டத்திருத்தம், பெண்களுக் கான சொத்துரிமையை உள்ளடக்கியது. அதேபோல் அய்யா பெரியாரும் (1935) தாழ்த்தப்பட்டவர்களுக் கான மாநாட்டை முதலில்  கூட்டியவராக இருந்தார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசால் அறிவிக்கப் பட்ட இந்தப் பெரியார் விருது தொடர்பான அறிக் கையில், ‘பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்கள்' என்று குறிப்பிடாமல், பொதுவான அறிக்கையாக இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவருக்கான தலைவர் என்று அடையாளப்படுத்துவதும், பெரியாரைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தலைவர் என்று அடையாளப்படுத்துவதும் பிரிவினையை ஏற் படுத்தும் வேலை. செயற்கைத்தனமான, உள்நோக்கம் கொண்ட அறிக்கை இது. பெரியார் விருதை ஒரு வட்டத்துக்குள் சுருக்குவது சட்டப்பூர்வமாகச் செய் வதுபோல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தைத் தோற்று விக்கிறது.

இந்த அறிக்கையைத் தயார்செய்த அதிகாரி களுக்கு, உள்நோக்கம் இருந்திருக்கலாம். இதை உன்னிப்பாக கவனிக்காமல் அறிக்கையை வெளி யிட்டிருக்கும் அமைச்சரின் அலட்சியம் கண்டிக்கத் தக்கது. மக்கள் நலனில், சமூக நலனில் அக்கறை இல்லாமல் அமைச்சர்கள் வேறு பல வேலைகளில் மட்டுமே கவனத்துடன் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி தடை விஷயத்திலும்கூட, 36 மணி நேரத்துக்குப் பிறகே ‘அதைப் பற்றி படிக்கவில்லை!’ எனக் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிக்கை தொடர்பான விஷயத்திலும்கூட, அமைச்சர்களின் கவனமின்மையே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இந்தக் கண்டன அறிக்கைக்குப் பிறகாவது, தமிழக அரசு பெரியார் விருதுக்குப் பொதுப்படையான அழைப்பை விடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

- குணவதி

நன்றி: விகடன்.காம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner