எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், டிச. 12 கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர், கவுசல்யாவை பட்டப்பகலில் வெட் டியது. இதில் சங்கர் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற் றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படை யைச் சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் இவர் கள் அனைவர்மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இவ்வழக்கில் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜன் 1500பக்க தீர்ப்பு வழங்கினார்.

கவுசல்யாவின் தாய் மற்றும் மாமன் உள்பட 3பேர் விடுதலை செய்யப்பட்ட னர். தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை சின்னசாமி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவ ருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

8 பேர் குற்றவாளிகள்

இதனை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இன்று தீர்ப்பளித்தார். கவுசல்யாவின் பெற் றோர் மற்றும் 8 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு  தீர்ப்பளித்தார்.

1. சின்னசாமி 2. ஜெகதீசன் 3. மணி கண்டன் 4. மைக்கேல் 5. செல்வக்குமார் 6. தன்ராஜ் 7. தமிழ் கலைவாணன் 8. மணிகண்டன்

கவுசல்யாவின் தாய், மாமா விடுதலை

பின்னர் வழக்கில் குற்றவாளிகளுக் கான தண்டனையை நீதிபதி அலமேலு அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்பில் அளிக்கப்பட்ட தண்டனை விவரம்

குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களுள் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்ன குமார் (கல்லூரி மாணவர்) ஆகிய மூவரைத் தவிர மற்ற எட்டு பேரும் குற்றவாளிகள் என உறுதி செய் யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், தமிழ் கலைவாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக் கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் குற்றம் சாட்டப் பட்ட தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளி யான மணிகண்டனுக்கு அய்ந்தாண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner