எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஜன. 4  டாக்டர் அம்பேத்கர் தொண்டு அறக்கட்டளை கட்டட திறப்பு விழா 30.12.2017 அன்று  பகல் 1.30 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள அறக்கட்டளை மைதானத் தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் சி.இராஜசேகரன் தலைமை வகித்தார்.

நிதிச்செயலாளர் செட்டியப்பன் சங்கர் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஊமை.ஜெயராமன் அறிமுக உரை யாற்றினார்.

செயற்குழு உறுப்பினர் எல்லை.தன ராஜ் நன்றி கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்கள்

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பா ளர்களாக பெரியார் மணியம்மை பல் கலைக்கழக உயராய்வு மய்ய இயக்குநர் க.அன்பழகன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பேராசிரியர் க.அருணன் ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரை யாற்றினர்.

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் மூன்று மாடி கொண்ட அடுக்ககத்தை சிறப்பு அழைப்பாளர்கள் முனைவர் அதிரடி அன்பழகன், பேராசிரியர்

க.அருணன் ஆகியோரின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்து உரையாற்றினார்.