எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருப்பூர், ஜன. 21- டில்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் குடும் பத்தினரை அவர்களது வீட்டில் கனிமொழி எம்.பி நேரில் நேற்று (20.1.2018) சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியிருப்பதா வது: பாதிக்கப்பட்ட சரத் பிரபு குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் பதில் கூற வேண்டும்.

இதற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மருத் துவ மாணவர் இறந்தது குறிப் பிடத்தக்கது. இந்த மரணம் முதலில் தற்கொலை என கூறப் பட்டு பிறகு கொலை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத் தில் நான் பல கேள்விகளை எழுப்பினேன். சரவணனின் குடும்பத்தார் இன்னும் நீதிமன் றத்துக்கு அலைந்து வருகின் றனர்.

இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள், கொலையாளிகள் யார் என இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அதற்கே இன்னும் நியாயம் கிடைக்காத நிலையில் மற்றொரு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாணவரும் தற் கொலை செய்து கொண்டார் என கூறுகின்றனர். ஆனால் சரத் பிரபுவின் கழுத்தில், நெற் றியில், கைகளில் இருக்கும் காயங்களை எல்லாம் பார்க்கும் போது இது தற்கொலை என தோன்றவில்லை.

இந்த மரணம் குறித்து பல கேள்விகளை நாடாளுமன்றத் தில் தி.மு.க. எழுப்பும். அதை தொடர்ந்து நீதி கிடைக்க பாடு படுவோம். இதில் தமிழக அர சானது மத்திய அரசை வலி யுறுத்தி நியாயம் கிடைக்க ஏற் பாடு செய்ய வேண்டும்.

நமது மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண் டும்.தமிழக மாணவர்கள் எங்கு படித்தாலும் பாதுகாப்பு இருக் கும் என்ற நம்பிக்கையை இந்த அரசு உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner