எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதர்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரித்து வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

‘பெரியார்' விருது பெற்ற மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி

சென்னை, ஜன.27  மனிதர்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரித்து வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் பெரியார் விருது பெற்ற மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள்.

15.1.2018 அன்று மாலை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற திராவிடர் திருநாள் விழா  - பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் விருது பெற்ற மக்கள் செல் வன் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பகுத்தறிவளர்கள் மத்தியில்

பேசுவது என்பது...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துகள். எல்லோருக்கும் வணக்கம். எங்கேயாவது சென்றால், நான் என்னு டைய இஷ்டத்திற்குப் பேசிவிடுவேன். ஆனால், பகுத்தறிவாளர்கள் மத்தியில் பேசுவது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

கதை சொல்லவா? நம்ம இடமே கதை சொல்கிற லெவலில்தான் இருக்கிறது. இன்றைக்கு இந்த விருதை வாங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த விருதை நான் பார்க்கும்பொழுதெல்லாம், கண்டிப்பாக அது பயமுறுத்தும். என்றைக்காவது நான் மூடத்தன மாக சிந்தித்தால், என்னை எச்சரிக்கும்.

மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய மிகப்பெரிய தலைவர் தந்தை பெரியார்

எனக்குப் பெரியார் அவர்களின் கருத்துகளைப் பற்றியோ, புத்தகங்களையோ நான் படித்தவன் கிடையாது. ஆனால், சக மனிதனை பிரித்து வைக்கிற சமூகத்திலிருந்து, மக்களை மீட்டெடுக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய மிகப்பெரிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரித்து வைப்பது என்பது

நான் என்றைக்கும், எல்லா இடங்களிலும் சொல் வேன் - என்னுடைய நண்பனுடைய ஜாதியோ, மதமோ தெரியாது; தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. என்னுடைய நண்பன் அவ்வளவு தான். என்னுடைய இக்கட்டான சூழ்நிலையில், என்கூட நின்றது என்னுடைய நண்பர்கள் மட்டும்தான். எல்லா சூழலிலும், நான் சோர்ந்து போய் இருந்தாலும் சரி, பணம் இல்லாதபோதும் சரி, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தபோதும் சரி - என்னு டைய மனது, மூளை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நான் என்னுடைய இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால், அது என்னுடைய நண்பர்களிடம் மட்டும் தான். அப்படிப்பட்ட நண்பர்களை, ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரித்து வைப்பது என்பது என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது என் னுடைய வாழ்க்கையில். அதை என்றைக்கோ தலைவர் செய்திருக்கிறார்.

பெரியார் கொள்கைகளை தெரிந்துகொள்வேன்!

நான் இன்னமும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பு கிறேன். புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்வேன். ஏற்கெனவே இந்தக் கொள்கைகளைப்பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பெரியார் விருதினை அளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் உரையாற்றினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner