எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென்காசி, மார்ச் 6 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலை வர் அய்யாக்கண்ணு தலைமை யில் விவசாயிகள், கடந்த 1-ஆம்   தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 4-வது நாளான நேற்று தென்காசி யில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது விவசாய கடன் தள்ளுபடி, காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.

தென்காசியில் பழைய  பேருந்து நிலையம் முன்பு பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொது மக்களிடம் வினியோகம் செய் தனர். கையில் மனித மண்டை ஓடுகளை ஏந்தியும், சில விவசாயிகள் அரை நிர்வாணத்திலும், தாரை தப்பட்டை முழங்க நூதன பிரசாரம் செய்தனர்.

அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- அரசு நிர்வாகம் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்காமலும் ஏமாற்றுகிறார் கள். வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் செய்ய வழியில் லாமல் கடன் வாங்கு கிறார்கள். அந்த கடனை கட்ட முடியாமல் நிலம் ஏலம் விடப் படுகிறது.

விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு ஓடிவிட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை கொடுத்து பெட்ரோல், டீசல் எடுக்க பயன்படுத்த அரசு முயற்சி செய்கிறது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண் டும். முல்லை பெரியாறு, பாலாறு அணை பிரச்சினை களையும் தீர்க்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாதிக் கப்பட்டால் பொது மக்கள்தான் பாதிக்கப்படு வார்கள். எனவே மரபணு விதை களை அனுமதிக்க கூடாது. விளை பொருட்களுக்கு நியாய மான விலை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள் ளோம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப கோரிக்கை வைக் கிறோம். தொடர்ந்து மத்திய அரசு, விவசாயிகளை சிரமப் படுத்தாது என்று எதிர்பார்க் கிறோம். இலங்கையில் ராஜ பக்சே தமிழர் களை கொன்று குவித்தது போல் பிரதமர் மோடி, விவசாயிகளை அழித்து விட மாட்டார் என்று நம்பு கிறோம். இவ்வாறு அய்யாக் கண்ணு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner