எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட இருவர் கைது  பழநி, மார்ச் 26- பழநி தண்டாயுத பாணி சாமிகோயிலில் நவ பாசான மூலவர் சிலை புதி தாக வடிவமைத்ததில் முறை கேடு நடந்தது தொடர்பாக கோயிலின் முன்னாள் செயல் அலுவலர், சிலையை வடிவ மைத்த ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையி னர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த 2004-இல் நவபாசன மூலவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி, புதிய சிலையை தங்கத்தால் வடிவமைக்க முடிவானது. இச் சிலையை காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத் தைச் சேர்ந்த முத்தையா ஸ்த பதி (வயது 77) வடிவமைத் தார். பின்னர் புதிதாக வடிவ மைத்த சிலையில் பழுது இருப்பது தெரியவரவே அடுத்த சில மாதங்களிலே அது அகற்றப்பட்டது. இந் நிலையில் இந்தச் சிலையை வடிவமைத்ததில் சுமார் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந் தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அய்.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையி லான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிலையில் 42 கிலோ தங்கம் குறைவதுடன் கோயில் நிர்வாகத்துக்கு சுமார் ரூ. 1.31 கோடி நட்டம் ஏற்படுத்தியதும் தெரியவந் தது. இதையடுத்து முத்தையா ஸ்தபதியையும், 2004இல் கோயிலின் செயல் அலுவல ராக இருந்த கே.கே. ராஜாவை யும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் கும்பகோணம் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யதில் நீதிபதி தேன்மொழி உத்தரவின்பேரில் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் இதேபோல ஒரு வழக் கில் வழக்கில் முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner