எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 15- காவிரி விவ காரத்தில் அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து ஆலோசிப்ப தற்காக திங்கள்கிழமை (16.4.2018) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2018) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

இந்தியாவுக்கு அம்பேத்கர் எந்த நோக்கத்துடன் அரசியல் சட்டத்தை வழங்கினாரோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மதவாத அடிப்படையில், சமூக நீதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு முடிவுகட்ட, அனைவரும் உறுதியேற்போம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப் பைக் கண்டிக்கும் வகையில், ஏப்.16-இல் வள்ளுவர் கோட் டம் அருகில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள் ளோம். காவிரி விவகாரத்தில் மேற் கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து 16-ஆம் தேதி மாலை 5 மணி யளவில் அண்ணா அறிவால யத்தில் அனைத்துக் கட்சி கூட் டத்தைக் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம். சித் திரை முதல் நாள்தாம் தமிழ்ப் புத்தாண்டு என ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் பேசிய தாக கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதுதான் எங்க ளுக்குப் புத்தாண்டு. ஆளுநர் கூறுவது பற்றி நாங்கள் கவ லைப்படவில்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner