எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.20 பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் எத்தனை வழக் குகளில்  எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நிர்பயா நிதியை ஒதுக்கியுள் ளது. இந்த நிதியைப் பெற்று தமிழகத்தில் பெண்கள் பாது காப்புக்காக  திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட வேண் டும் எனக்கோரி வழக்குரைஞர் சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.  இந்த  வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், இது குறித்து தமிழக டிஜிபி பதில் தருமாறு அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக் கில் டிஜிபி சார்பில் உதவி அய்ஜி மகேஷ்வரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த பதில் மனுவில், பெண் களுக்கு  எதிரான புகார்களை விசாரிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவ லர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர்.  பெண்கள் பாது காப்பு  தொடர்பான விழிப் புணர்வு திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங் களை விசாரிக்கவும், தடுக்கவும் தரமான  பாதுகாப்பு நடை முறைகளுக்கான வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் கள் உதவிக்கான 34 மொபைல் வேன்கள் வாங்குவது போன்ற பல்வேறு  பணிகளை மேற் கொள்ள ரூ.17 கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரம் நிதி மத்திய அரசிடம் கோரப்பட் டுள்ளது. அந்த மனு மத்திய அரசிடம் நிலுவையில்  உள் ளது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கு நேற்றுமுன்தினம் நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தண்டபாணி ஆகி யோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் சூரியப்பிரகாசம்  நீதிபதிகளிடம், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும். நிர்பயா நிதியைப் பெற்று அரசு  பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்றார். அரசு பிளீடர் ராஜகோபாலன் ஆஜ ராகி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்றார். இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், தமிழகத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக செயின்  பறிப்புகளும், தனியாக வீடு களில் இருக்கும் வயதான பெண்களைத் தாக்கி பொருட் களை கொள்ளையடிப்பதும் அதிகரித்துள்ளது.

அரசு ஏற்பாடு செய்துள்ள கவுன்சலிங் மற்றும் விசாரணை போதுமானதாக இல்லை. இதுபோன்று பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது எத் தனை  எப்அய்ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன?. அந்த வழக்குகள் மீது நடத்தப்படும் விசாரணையின் நிலை என்ன?. இதுபோன்ற குற்றங்கள் நடக் காமல் தடுக்க  என்ன நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன? என்பது குறித்து அரசு விரிவான அறிக்கையைத் தாக் கல் செய்ய வேண்டும்  என்று உத்தரவிட்டு  விசாரணையை ஜூன் 6ஆம் தேதி தள்ளி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner