எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாணவர், இளைஞர்களின் குதூகலப் பெருவிழா!

அறிவுத் தேடலின் புகலிடம்!! சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி

புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்

சென்னை, ஏப். 21- தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து, மாணவ--மணிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற் றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குடும்பத்துடன் கோடை விடுமுறையை எப்படி கழிப்பது என்று எண்ணுகையில் வழமைபோல், சென்னை புத்தகச் சங்கமத்தின் அறிவிப்பு வெளியானது.  ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 25 முடிய முற்பகல் 11 மணி தொடங்கி இரவு 9 மணி முடிய சிறப்புப் புத்தகக் காட்சி சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது. அனைத்து பதிப்பகங்களின் சார்பிலும் புத்தகங்களின் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்து புத்தகக்காட்சியில் புத்தகங்கள் அளிக்கப்படுகின்றன.

கோடையில் குளிர்தரு நிழலாக, அரங்கம்  முழு வதும் குளிரூட்டப்பட்டு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகக் காட்சி ஆறாம் ஆண்டில் நடைபெறுகிறது.

அறிவுத்தேடலின் புகலிடமாக சென்னை புத்தக சங்கமம் விளங்குகிறது. உலகப் புத்தக பெருவிழாவை யொட்டி, சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி திட்டமிட்டு, வெகு நேர்த்தியாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னை புத்தக சங்கமத்துக்கு வருகைதருவோருக்கு எவ்வித கட்டணமும் இன்றி அனுமதி அளிக்கப்படு கிறது. வாசகர்கள், பார்வையாளர்கள் அரங்குகளை தெரிந்து உரிய பதிப்பகம் இருக்கும் இடத்திற்கு செல்ல ஏதுவாக, பதிப்பகங்களின்  அரங்குகள் பட்டி யல் அரங்கின் முகப்பிலேயே இருபக்கத்திலும் அமைக் கப்பட்டுள்ளது. தரைத்தளம் தொடங்கி, கீழ்த்தளம் வரை சென்று மீண்டும் தரைத்தளத்திற்கு வந்து சேரும் வண்ணம் எந்த அரங்கையும் பார்வையாளர்கள் விட்டு விடாதபடி நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் புத் தகக் காட்சிக்கு வருகைதரும் வாசகர்களில் நாள்தோ றும் இருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எஸ்.எம்.சில்க்ஸ் வழங்கும் ஒரு புடவையும், பவார் லைஃப் ஸ்டைல் வழங்கும் ஒரு செல்பேசியும் வழங்கப்படு கிறது.

இவை மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான பயிற் சிகள் வகுப்புகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுபவர் களுக்கும் பங்கேற்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

வாசகப் பார்வையாளர்களுக்கு குடிநீர் வசதி,  உணவு அரங்குகள் அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாவது சிறப்புப் புத்தகக் காட்சியை நேற்று (20.4.2018) மாலை வரியி யல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையில் புரட்சி இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்து வைத்தார்.

சென்னை புத்தகச் சங்கமத்தின் புத்தகத் திருவிழா சிறப்புப் புத்தகக்காட்சியில் அமைக்கப்பெற்றுள்ள அனைத்து அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்டார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு களைக் கொண்ட அரங்கில் அவர் பார்வையை சுழற் றினார். அனைத்து புத்தகங்களையும் மிகவும் கவன மாக பார்வையிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் களை பார்வையிட்டார். அந்நூலின் இரண்டாம் பாகத்தில் அட்டையில்  தந்தைபெரியாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருக்கின்ற படத்தைப் பார்த்து, ஆசிரியர் அவர்களின் இளமைக்கால படம் என்று வியந்தார். அப்போது உடனிருந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆமாம். 10 வயதிலிருந்தே இயக்கத்தில் அய்யாவுடன் இருப்ப வராயிற்றே என்றார். மேலும், தந்தை பெரியார் தொடங்கி நடத்திய ஏடுகள் புரட்சி, குடிஅரசு, பகுத் தறிவு, விடுதலை, உண்மை என்று வெளியிட்டார் என்பதைக் குறிப்பிட்டார். புரட்சி இயக்குநர் பாரதிராஜாவுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இயக்க வெளியீடுகளை வழங்கினார். புரட்சி இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை புத் தகச் சங்கமத்தின் இயக்குநர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய நூலினை இயக்குநர் பாரதிராஜாவுக்கு அளித்தார்.

புரட்சி இயக்குநர் வருகையின்போது வாசகப் பார்வையாளர்கள், பதிப்பகத்தார், பொதுமக்கள்  பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றனர்.

சிறப்பு உரையரங்கம்

திறப்பு விழாவில் புத்தக அரங்குகளை பார்வையிட்ட பின்னர் அரங்கின் அருகில் அமையப்பெற்ற மேடைக்கு சென்றார்.  கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் வர வேற்றார்.

கழகத் துணைத் தலைவர் தலைமையுரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  தலைமையுரையாற்றினார்.

புத்தக வாசிப்பு குறைந்து வருகிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத்தின் சென்னை புத்தச் சங்க மத்தின் புத்தகக்காட்சி ஆறாவது ஆண்டாக நடைபெறு கிறது. எங்கெல்லாம் புத்தகக் காட்சி நடைபெறு கின்றனவோ, அங்கெல்லாம் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அரங்கம் அமைக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் தந்தை பெரியார் புத்தகங் களை ஏராளமாக வாங்குகிறார்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை ஏராளமானவர்கள் வாங்குகிறார்கள்.

1958ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஊர் வலம் பற்றி புரட்சிக்கவிஞர் மண்டை சுரப்பை உலகு தொழும் என்று பாடினார். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட அவர் இறந்த பின்னர் அதிகம் தேவைப்படுகிறார். மய்யப்புள்ளியாக இருந்து வரு கிறார். தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளிலும் கோடை இடி மழையாக இயக்குநர் கர்ஜித்து வரு கிறார்.

இயக்கத்தில் இருப்பவர்கள் அதிகம் திரைப்படம் பார்ப்பதில்லை. கட்டபொம்மன் திரைப்படத்துக்குப் பிறகு வேதம் புதிது படத்தை பார்த்தோம். அப்போது, அந்த படத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்ட போது, எம்.ஜி. ஆர்.தலையிட்டு, பிரச்சினையை காலங்கடத்த கடத்த, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கையில்  எடுத்துச் செல்ல இருக்கிறார் என்றதும், அப்படத்துக்கு தணிக்கைத் துறையினரிடமிருந்து அனுமதி கிடைத் தது.

அந்த படத்தில் பாலுத்தேவர் என்பதில் பாலு என்பது உங்கள் பெயர், தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்கும் காட்சி இருக்கும். அப்படிப்பட்ட வாள்வீச்சு இயக்குநருடையது. புரட்சி இயக்குநரின் படங்களில் சிலுவை, பூணூல் தூக்கி எறியும் காட்சிகளும் இடம் பெறும்.

தந்தை பெரியார் சிலைகுறித்து அனாமதேயங்கள் பேசியபோது, இயக்குநரின் பேச்சு உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதில் பெரியார் தனி மனிதரல்லர், தமிழர்களின் அடையாளம் என்றார்.

காவிரிப்பிரச்சினையாக இருந்தாலும், ஆண்டாள் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இயக்குநர் எழுச்சி யுடன் களம் கண்டு வருபவர்.

ஆண்டாள் கோவில் கருவறையில் குருக்களின் செயல் சந்தி சிரிக்கிறது. ஒரு காலத்தில் என்சிபிஎச் அதிக புத்தகங்களை பதிப்பித்தது. இன்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள் அதிக அளவில் வெளியிடப் பட்டு முதலிடத்தில் உள்ளது. 2.5.1925 அன்று தொடங்கப்பட்ட குடிஅரசு இதழ் முதல்  1949வரை குடிஅரசு தொகுதிகளாக வெளியிடப் பட்டிருக்கின்றன. ஜாதி, மதம், கடவுள், பெண்ணு ரிமை என பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சிக்கனக்காரர் தந்தை பெரியார் என்று கூறினாலும், குறைந்த விலையிலேயே புத்தகங்களை கொடுப்பார். தந்தை பெரியார் கூட்டத்தில் பேசும்போது, அன்னை மணியம்மையார், ஆசிரியர் புத்தங்கள் விற்பனையில் இருப்பார்கள். கூட்டம் முடிந்து கிளம்பும்போது, தந்தை பெரியார் கேட்கின்ற முதல் கேள்வி எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்பதுதான். குறைவாக கூட்டம் கூடினாலும், அதிக புத்தகங்கள் விற்றன என்றால், பிரயோசனமான கூட்டம் என்பார். அதிக கூட்டம் கூடி, குறைந்த புத்தகங்கள் விற்றன என்றால், பய னற்ற கூட்டம் என்பார். ஏனென்றால், நூல்களை வாங்கிச் சென்றார்கள் என்றால், பின்னர் அது தன் வேலையை தானே செய்துவிடும். பூணூல்களின் ஆதிக்கத்தை தகர்த்திட நூல்களின் அவசியம் உணர்ந் திட வேண்டும்.

இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி-.பூங்குன்றன் பேசினார்.

வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் உரையில், இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புதுமை படைத் தவர். தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இலக்கியம் பெரிது. பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களைத் தொடர்ந்து பாரதிராஜா சிறப்பாக செயல்பட்டு வந்த வர். இளமை இருக்கிறது. வயதைப் பார்க்காதீர்கள். பெரியார் பற்றி எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

புரட்சி இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிப் பிழம்பாக முழங்கினார். அவர்தம் உரை யில் தமிழ் மொழி, திராவிட இன உணர்வு மேலோங் கியது. கீரைகளிடையே விஷச் செடிகளை தமிழர்கள் அடையாளம் கண்டிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், எழுத்தாளர் மஞ்சைவசந்தன்,பெரியார் திடல் மேலா ளர் ப.சீதாராமன், புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், அச்சகப்பிரிவு மேலாளர்க.சரவணன்,  பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், புலவர் பா.வீரமணி, பேராசிரியர் அய்யாசாமி, திரைப்பட இயக்குநர் அமீர் அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சென்னை புத்தக சங்கமத்தின் ஒருங் கிணைப்பாளர் விழிகள் பதிப்பகம் வேணுகோபால் நன்றி கூறினார்.

சிறுவன் வரைந்த பெரியார் படம்

ஏழாம் வகுப்பு பயிலும் சிறுவன் அரிகிருஷ்ணன் தன் தந்தை சங்கருடன் தந்தை பெரியார் உருவப் படத்தை வரைந்து எடுத்துக்கொண்டு மேடையில் இருந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் கொடுத்தான். அதில் கையொப்பமிட்டு திருப்பிக் கொடுக்க நினைத்த இயக்குநரிடம் அப்படம் அவருக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்த சிறுவனை பெரிதும் பாராட் டினார். ஒளிப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். இயக்குநரிடம் பலரும் அன்பின் மிகுதியால் ஒளிப் படம் எடுத்துக்கொண்டபோதும் சளைக்காமல் படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.  மிகுந்த மனநிறைவுடன் விடைபெற்ற புரட்சி இயக்குநர் பாரதிராஜா ஆசிரியரிடம் கூறுங்கள் மிக வும் மகிழ்ச்சி அடைவார் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner