எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப். 23- உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ் நாடு -புதுச்சேரி அனைத்து மருத்துவ கல்லூரி மாண வர்கள் கூட்டமைப்பு, தமிழர்கள் உரி மைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நீட் தேர்வு எதிர்ப்பு மாநாடு சென்னையில் 19.04.2018 அன்று  நடத்தப்பட்டது  இம்மாநாட்டில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குதர வேண்டும், கல் வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் மறைந்த மாணவி அனி தாவுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மாநாட்டில் கவிப்பேரசு வைரமுத்து பேசியதாவது:

"ஒரு முதல்-அமைச்சர் பிரதம மந்தி ரிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத் தில், தங்கள் மாநிலத்தில் (குஜராத்) 98சதவீத மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் என்றும் தங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த முதல்-அமைச்சர் பிறகு பிரதமர் ஆனார். புதிய பதவிக்கு வந்ததும் நீட்" டை  ஆதரித்து பேசினார். பதவிக்கு ஒரு பேச்சு. ஏன் இந்த முரண்பாடு என்று விளங்கவில்லை.

சில அறிவுஜீவிகள், உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு நீட் விவகாரத்தில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று பேசி வருகிறார்கள்.  பாடுபட்டு நாம் பெற்றிருந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 50 சதவீதமாக குறைத்த பிறகு நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் 69 சதவீதமாக பெறவில்லையா?

அதேபோல் நீட் விவகாரத்திலும்  வெற்றி பெறுவோம். ஒரே கருத்து கொண்ட இருவர் சேர்வதே கஷ்டம் என்பார்கள். இங்கோ ஆயிரம் பேர் சேர்ந்து இருக்கிறீர்கள்.எனவே எனக்கு மிகுந்த நம்பிக்கை உள் ளது, என்றார்.

வ.கவுதமன் உறுதி!

ஜல்லிக்கட்டு, அய்பிஎல் போல உறுதியான போராட்டங்கள் நடத்தி, 6ஆம் தேதி "நீட்" தேர்வை தடுத்து நிறுத் துவோம் என்று இயக்குநர் கவுதமன் பேசுகையில் குறிப்பிட்டார்.

தீர்மானங்களை விளக்கி மாணவர்-இளைஞர் கூட்டமைப்புகளின் ஒருங்கி ணைப்பாளர் வ.கவுதமன் பேசியதாவது:  "எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழர்கள். எங்களை அழித்துவிட்டு நீங்கள் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. "நீட் தேர்வை" தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகவே கருதுகிறோம். இன்னும்கூட கால அவகாசம் உள்ளது. நீட் தேர்வை விலக் கிக் கொள்ளுங்கள். எங்கள் உரிமைக்காக ஏற்கனவே நடந்த ஜல்லிக்கட்டு, அய் பிஎல் மற்றும் கருப்புக்கொடி போராட் டங்களை பார்த்து இருப்பீர்கள். எங்கள் உரிமையை பறிக்கும் வகையில், நீட்  தேர்வை மே 6ஆம் தேதி நடத்த முற் பட்டால், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டு மொத்த தமிழக மக்களை திரட்டி  அதை தடுத்து நிறுத்துவோம், என்றார்.

மாநாட்டில இரா.நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன், வைகோ, திருச்சி சிவா, திராவிடர் கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செல்வப் பெருந்தகை, வழக்குரைஞர் பாலு,  சீமான், வேல்முருகன், ஜவாஹி ருல்லா,தமிமுன் அன்சாரி, ஆளூர் ஷா நவாஸ், நடிகர் சத்யராஜ், கவிப்பேரசு வைரமுத்து, திருமுருகன் காந்திஉள்பட அரசியல்,சமூக இயக்கங்களின் தலை வர்கள் பேசினர். உலகத்தமிழ் அமைப் பின் சார்பாக நாஞ்சில் பீட்டர் அமெரிக் காவில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டு தீர்மானங்கள்

1.            மாநில அரசின் பாடத்திட்டத் தில் படிக்கும் ஊர்புற, ஏழை மாணவர் கள் மருத்துவர்களாவதற்கும், கடைக் கோடிச் சிற்றூர்களில் தேவையான மருத்துவத் தொண்டாற்றுவதற்கும் பெரும்தடையாக இருக்கும் மிகக் கொடிய நீட் தேர்வுக்கு எதிராகத் தம் உயிரையே ஈகம் செய்த அனிதாவிற்கு இம்மாநாடு மரியாதை செலுத்துகிறது.

2.            தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட, நீட் விலக்குக்கோரும் தமிழ்நாட்டு அரசின் சட்டமுன்வரைவை உடனடியாக மத் திய அரசுச் சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

3.            நீட் மட்டுமல்லாது, இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் நடத்தும் எவ்வகையான நுழைவுத்தேர்வும் இந் திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு கள், மாணவர் சேர்க்கை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு உட் பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தற்போ தைய தீர்ப்புக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் வழக்குத் தொடுத்து, நுழைவுத்தேர்வு / மாணவர் சேர்க்கை உரிமைகளை மாநில அரசுகளே திரும்பப்பெற இம்மாநாடு வலியுறுத்துகிறது. 4.           இந்திய அரசமைப்புச் சட்டத் திற்குப் புறம்பான முறையில் நெருக்கடி நிலையின்போது, மாநில அரசின் கல்வி உரிமை மத்திய அரசால் தகாவழி யில் பறிக்கப்பட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க இம்மா நாடு வலியுறுத்துகிறது.

5. தமிழ்நாடு மருத்துவக் கல்வி நிறு வனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழ கங்கள் ஆகியவற்றில் இருந்து, (அ) இளநிலை மருத்துவத்தில் (MBBS) 15 விழுக்காடு இடங்கள்

(ஆ) மருத்துவ மேற்படிப்பு (MD MS), மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றில் 50 விழுக்காடு இடங்கள்

(இ) உயர் மருத்துவக் கல்வியில் (Mch DM) 100 விழுக்காடு இடங்கள் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை ஆந்திர மாநிலம், காஷ்மீர் மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிலை யங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கமுடியும் என்று தகுந்த சட்டத்திருத்தத்தை தமிழ்நாட்டு அரசு கொண்டுவர வேண்டும்.

6.            மத்திய அரசு நடத்தும் மருத் துவ கல்வி பல்கலைக்கழகங்களில் தமிழ் நாட்டின் மாணவர்களை இன மொழி ஜாதிப் பாகுபாடுகளில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்

7. தமிழ் இனம் , தமிழ்மொழி , தமிழர் நிலம், தமிழர் உரிமை எனும் தளங்களில் களங்களில் இறங்கிப் போராடி வருகின்ற இளைஞர்கள் மற் றும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மை ஆண்டுக் காலமாக கூடிக்கொண்டே இருக்கிறது. நிலவுகின்ற சூழ்நிலை களும், தமிழ் இனத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படுகின்ற பல்வகை வன்முறைகளும் தான் தமிழ் மாணவர் -இளைஞர்களின் எழுச்சிக்கான காரணம் என்றாலும் கூட, அப்படிப் போராடி வருவோரை வாழ்த்துவதும், அங்கீகரிப் பதும் நமது முதன்மையான கடமை யாகும்.

அந்த வகையில் தமிழ் இன மீட்சிக் காகப் பல்வேறு தளங்களிலும், களங்க ளிலும் கொஞ்சமும் அயராமல் போரா டிக் கொண்டிருக்கின்ற, கொஞ்சமும் அயராமல் போராட முன்வருகின்ற லட் சக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த மாநாடு தன் மனமார்ந்த பாராட்டுக்களையும், நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள் கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner