எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 29 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நிலம் ஒதுக்கீடு ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கோரி தூத்துக்குடியில் மக்கள் பலர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுது. காவல்துறையினர் இந்த கண்முடி தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கூட ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் மூலமாக சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு எதிரான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை விரி வாக்கத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நிலம் ஒதுக் கீடு ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது. இது ஸ்டெர்லைட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிலம் கொடுக்க ஸ்டெர்லைட்டிடம் வாங் கப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.