எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 15- இந்தோனே சியா தலைநகர் ஜகர்த்தா மற் றும் பிளமிங் நகரங்களில் நடை பெற்ற 18ஆ-வது ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் பதக் கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ் வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று தலை மைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகளின் 11 பயிற்றுநர்க ளுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோ லைகளை முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner