எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எச். ராஜா என்ற பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, வாய்க்கொழுப்புடனும், வக்கணையுடனும் பேசி, காவல்துறையையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில், 'கொச்சை - பச்சை அர்ச்சனை' செய்தவர்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரைத் தேட மூன்று போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் அவர் அதே போலீஸ் பாதுகாப்போடு, ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்திப்பதும், அரசியல் ஆலாபனை - ஆலோசனை நடத்துவதும், நியாயந்தானா? மூன்று படைகள் தேடுகின்றனவா?

தமிழக முதல்வரிடம் உள்ள காவல்துறைக்கு இதைவிட மகத்தான அவமானம் வேறு உண்டா?

கருணாஸ் என்பவர்மீது வேக, வேகமாகப் பாய்ந்த சட்டம், ராஜாக்கள்மீது ஏன் பாய மறுக்கிறது அல்லது தயங்குகிறது?

இதிலும் "சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பனருக்கு ஒரு நீதியா?" (பார்ப்பன பாரதியார் அன்று கேட்டதை இன்று நாடு கேட்கிறதே!)

காவல்துறையின் கைகளைக் கட்டிய நிலையில் இப்படி  நடப்பது தமிழக அரசுக்குப் பெருமையா? சிறுமையா?

மீண்டும்  பெருங்கலவரங்கள் வெடிக்காமல் மதக்கலவரங் களைத் தூண்டும்  இந்த நபர்களைக் கண்டும் காணாமல் இருப்பது எவ்வகையில் சரி?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner