எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆட்சியர் வேண்டுகோள்

சேலம், அக். 29- சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஜாதி, மத பேதமற்று, மதநல்லிணக்கத்தையும், ஜாதிய ஒற்றுமையையும் எப் போதும் பேணிவரும் மாவட் டம் என்பதிலே நாம் அனை வரும் பெருமிதம் கொள்ள முடியும். இருப்பினும் சமீப காலத்தில் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அமைப்புகளில் நிகழ்ந் திருக்கும் விரும்பதகாத சம்ப வம் வெளிவருகிறது.

ஒரு பள்ளியின் சத்துணவுக் கூடத்தின் சமையலர் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பள்ளி மாண வர்களின் பெற்றோர்கள் மற் றும் பொதுமக்கள், அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனவும், அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த னர். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை முற்றிலு மாக தவிர்க்கப்பட்டிருக்க வேண் டும்.

இத்தகைய நிகழ்வுகள் இனி சேலம் மாவட்டத்தில், குறிப்பாக பள்ளி கல்வித் துறையை சேர்ந்த அமைப்பு களில், எங்கும் நடைபெறாமல் உறுதி செய்து கொள்ள வேண் டியது அவசியம். இதில் கல் வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தினர் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. தாழ்த் தப்பட்டவர்களை யாரும் பணி செய்ய விடாமல் ஒதுக்கி வைக் கக்கூடாது.

பட்டியல் இனத்தவர் மற் றும் பழங்குடியினருக்கு எதி ரான அநீதிகளை தடுப்பதற்காக பல்வேறு குற்றவியல் சட்டப்பிரிவுகள் உள்ளன. இது தீவிர மாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சட்டங்கள் காவல்துறை வழியாக உடனடி யாகவும், தீவிரமாகவும் நடை முறைப்படுத்த மாவட்ட நிர் வாகம் உறுதியாக இருக்கிறது. கல்வித்துறையினர் சமத்துவம் மற்றும் கண்ணியம் தவறாது செயல்படுவோம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அனைவரும் இன்னும் கவனமுடனும், ஜாதி, மத, இன நல்லிணக்கத்தை அனைவ ரும் கடைப்பிடிக்க வேண்டும். நல்லிணக்கத்தை மாணவர், பொதுமக்கள் என அனைவரும் இன்னும் செழுமையாக இயன்ற அனைத்து பணிகளை யும் ஆற்றும்படி கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner