எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 31- சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

சத்துணவு ஊழியர்கள் அனை வரையும் முழுநேர அரசு ஊழி யராக அறிவித்து வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார் பில் கடந்த பல ஆண்டுகளாக வேலை நிறுத் தம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு இதுவரை கோரிக் கைகள் மீது சுமூக தீர்வு காணாததால் 3 நாட்கள் காத்தி ருப்பு போராட்டத் தில் ஈடு பட்டனர். அப்போதும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத தால், திங்கட்கிழமை முதல் (அக். 29) சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செவ்வாயன்று (அக். 30) சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். பேச்சுவார்த்தையில் மாநிலத் தலைவர் எஸ்.சுந்த ராம்மாள், பொதுச் செயலாளர் இரா.நூர்ஜகான், பொருளாளர் பே.பேயத்தேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நூர்ஜகான் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உங்களது கோரிக் கைகள் முதலமைச்சரின் கவனத் திற்கு இதுவரை வரவில்லை என்றும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டு பதில் கூறுவதாக தெரிவித்தார். மேலும் நிதி இல்லை என்றும் கூறுகிறார். நாங்கள் 2013ஆம் ஆண்டு துறை அமைச்சர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தோம். இரண்டு நாள் களில் பேசிவிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 2015ஆம் ஆண்டு 7 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டோம். அப்போதும் இரண்டு நாட்களில் பேசிவிட்டு நட வடிக்கை எடுப்பதாக தெரிவித் தார்கள். ஆனால் எந்த நட வடிக்கையும் இல்லை.இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்ட மும், செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி பேரணியும் நடத்தினோம். ஆனால் அரசு எந்த நடவடிக் கையோ, பேச்சுவார்த்தைக்கோ அழைக்கவில்லை. இந்த வேலை யில் கணவனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைகளுக்கே முன் னுரிமை அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது வெறும் 2 ஆயிரம் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது. வேறு வழியில்லாமல் தற் போது 3 நாட்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், 2 நாட்களாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டோம். போராட்டக் களத் தில் இறங்கிய பிறகே இன்று (செவ்வாய்க் கிழமை) அமைச் சர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத் தினார். ஆனால் அதில் எந்த சுமூகத் தீர்வும் எட்டப்பட வில்லை. போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner