எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11 உரிமை களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு விரோ தமாக பழிவாங்கும் நடவடிக் கைகள் மேற்கொள்வது சட்ட விரோதம் என்று பால கிருஷ் ணன் கண்டனம் தெரிவித்துள் ளார்.  இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங் களது நியாயமான  கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்று அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் பணியில் சேர மறுக்கும் நிலை, தற்காலிகப் பணி நீக்கம் என்று சொல்லி  பணியில் அனுமதிக்காத போக்கு, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகக் கூறி பணி மறுக்கும் நிலை போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஊழியர் விரோதப் போக்கை கைவிட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது சட்ட விரோதம் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.  அத்தீர்ப்பையும் மீறி தமிழக அரசு செயல்பட்டு வருவது சட்டவிரோதமாகும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தேர்தலில் அதிக இடங்களை கேட்டு அதிமுகவை மிரட்டும்  பாஜக

முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, பிப்.11 தமிழகத்தில் கட்சியை வளர்க்க அதிமுகவை மிரட்டி கூடுதல் இடங்களை பாஜக கேட்டு வருவ தாக முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில்  பாஜக கட்சியை வளர்க்க, அதிமுகவை மிரட்டி குரல் வளையை நெரித்து தேர்தலில்  அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப் பினும் பாஜக தமிழகத்தில் ஒரு போதும் வளராது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9  கட்சிகள் உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப் பூர்வமாக இதுவரை பேசவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்படும்.

கூட்டணி குறித்து இறுதி  முடிவு எடுக்க வேண்டியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில்  ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள்போது நேரில் வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல்  பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை  சொல்வார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பல  கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள்  வெளி வந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner