எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11  மக்களவை தேர்த லுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

நாடு முழுவதும், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிக்க உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, காங் கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சென்னை மாவட்டத்தில், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி முகாமை, அண்ணாநகர் செனாய்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான கார்த்தி கேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் களிடம் கூறியதாவது: வருகின்றமக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வி.வி. பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ளும்) என்ற நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான்  பயன்படுத்தப்படும். இந்த இயந்திரத்தில் வாக்காளர்கள், நாம் யாருக்கு வாக் களித்தோம் என்பது வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும். வாக்களித்ததும், இயந்திரத்தில் பிரிண்ட் ஆகி, அதில்  இணைக்கப்பட்டுள்ள பாக்சில் ஒரு துண்டு சீட்டு விழும். அந்த துண்டு சீட்டை வாக் களித்தவர்கள் பார்த்து, நாம் யாருக்கு வாக்களித்தோம், எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி  செய்து கொள்ளலாம். சிலர் அந்த துண்டு சீட்டை, ஒப்புதல் சீட்டாக கையில் எடுத்துக்கொள் ளலாம் என்று கருதுகிறார்கள். அது தவறானது. அந்த ஒப்புதல் சீட்டு, பொதுமக்கள் எடுத்து செல்ல முடியாது. 7 வினாடிகள் அதை பார்க்க முடியும். சென்னையில் உள்ள 913 வாக்குச்சாவடிகளிலும், பொது மக்கள் பார்வைக்காக 9.2.2019 முதல் 10 நாட்கள் வைக்கப்படும். அவர்கள் மாதிரி  ஓட்டு போட்டு பார்த்து தெரிந்து கொள் ளலாம். அதேபோன்று, தமிழகம் முழு வதும் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 5 அல்லது 6 நாட்கள் வைக்கப்படும். இவ்வாறு கூறினார். அதன் பின்  கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு: தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி களிலும் மக்களவை தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று டில்லியில் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு  அளிக்கப்பட்டுள்ளது.  அது பற்றி உங்கள் கருத்து?

தேர்தல் ஆணையத்திடம்தான் மனு கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அதுபற்றி முடிவு எடுக்கும். தமிழக அளவில் பார்த்தால், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம்  என அனைத்தும் 100 சதவிகிதம் தயார் நிலையில் இருக்கிறது. அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி கடிதம் எழுதி இருக்கிறோம். சட்டம் -ஒழுங்கு பிரச்சினை குறித்தும்  ஆலோசனை நடத் தப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் எப் போது உத்தரவு கொடுத்தாலும் தேர்தலை  நடத்த தமிழக தேர்தல் அலுவலகம் தயாராகவே இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner