எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 6  பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி சார்பில், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் வேப்பேரி பெரியார் திடலில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேப்பேரி பெரியார் திடலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி இயங்கி வருகிறது. இங்கு 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப் -4 மற்றும் யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., டிஇடி என்னும் ஆரம்பப் பள்ளி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை (மார்ச் 9) காலை 10 மணிக்கு நடை பெறவுள்ளது.

கருத்தரங்கில், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன் னாள் மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வுள்ளனர். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசவுள்ளனர். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 044-26618056, 99406 38537 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner