எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.8 எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் &- சென்னை வரை 277 கி.மீ. தூரத்துக்கு எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டது. அதற்காக, 2560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவேண்டிய தேவை இருந்தது. அந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலத்தின் வழியாகவே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

அதனையடுத்து, இந்த திட்டத்துக் காக நிலம் கையகப்படுத்தும் வகையில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், தமிழக அரசு விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டது.

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் (இவரே இதற்கு எதிராகக் கூட்டணியில் சேர்ந் துள்ளார்), விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த மனுவில், ‘எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல், மத்திய, மாநில அரசுகள் அவசரகதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முனை கின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழக்கிய உயர் நீதிமன்றம், ‘இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அனைத்து அரசாணையையும் ரத்து செய்தது. மேலும், வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற் றங்கள் அனைத்தையும் 8 வார காலத் துக்குள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

மத்திய சுற்றுச்சூழல் அனுமதி இல் லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயன்றால், புதிதாக அரசாணை வெளியிடவேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன் றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வ ரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட இருந்த விவ சாயிகள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை  வரவேற்றனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner