எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் மாநாடு: திருமாவளவன்

சென்னை, ஜன. 4-- மத்திய அர சின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஜனவரி 21ஆம் தேதி சென்னையில் மாநாடு நடத்த உள்ளதாக தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.

கல்வித் தாய் சாவித்ரி பாய் பூலேயின் 186ஆவது பிறந்த நாளை யொட்டி சென்னையில் செவ்வாயன்று (ஜன.3) விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவள வன் அவரது உருவப் படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாநாட்டு ஜோதியை மாணவர் கழக மாநிலச் செய லாளர்கள் பாரதிபிரபு, இளைய நிலா ஆகியோரிடம் வழங்கி னார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தலித்துகள், பிற்படுத்தப்பட் டவர்கள், சிறுபான்மையினர், பெண்களுக்கு சாதி, மதத்தின் பெயரால் கல்வி உரிமை மறுக் கப்பட்டு குலக் கல்விமுறை நடைமுறையில் இருந்த போது, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் கல்வி உரிமைக்காக போராடியவர் சாவித்ரி பாய். மகாராஷ்டிராமாநிலத்தில் தானே பள்ளியைத் திறந்து ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு பிற்போக்குத்தன மான சமூகத்தை உருவாக்கு கின்ற வகையில் புதியகல்விக் கொள்கை என்ற பெயரில் குலக் கல்விமுறையையும், சமஸ்கிருததிணிப்பையும் நடைமுறைப்படுத்த முயற்சிக் கிறது. மேலும் கல்வியை முத லாளிகளின் கைகளில் தாரை வார்க்கின்ற முயற்சியை எடுத்துவருகிறது. இன்றைய இந்தியா மிகப் பெரும் வகுப்பு வாத அச்சுறுத் தலை எதிர் கொண்டு வருகிறது.

இந்தச்சூழ்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் இந்து சனாதா னக் கல்வி முறையை எதிர்க் கும் விதமாக ஜனவரி 21ஆம் தேதி சென்னையில் மாண வர் உரிமைக்கான தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து கல்வியாளர்களும், ஆராய்ச்சி யாளர்களும், மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

வறட்சியால் தற்கொலை, அதிர்ச்சி மரணம் என 80 விவ சாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அவர் களுக்கு இதுவரை எந்த நிவார ணமும் வழங்கவில்லை. உட னடியாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து வறட்சிகுறித்த அறிக் கையை அளித்து, வறட்சி பாதித்த மாநில மாக அறிவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலும் தற்கொலை செய்த விவசாயி களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாயும், பாதிக்கப் பட்ட நெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரமும், விவ சாயத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner