எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழடியில் அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து
நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய அமைச்சருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன. 7- மத்திய கலாச் சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழு தியுள்ளார். அதில் கூறியிருப் பதாவது:

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை. சிவ கங்கை மாவட்டங்களுக்கு எல் லையாக இருக்கும் சிலைமான் அருகில் உள்ள கீழடி கிராமத் தில் நடைபெற்று வந்த அக ழாய்வுப் பணிகளை நிறுத்த, மத்திய தொல்லியல் ஆலோச னைக்குழு எடுத்துள்ள  முடிவை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் சார்பில் இப்பகுதியில், இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் கிடைத்துள்ள பழைமையான சான்றுகளின் மூலம், தமிழர் களின் நாகரீகம், வாழ்வியல் வரலாறு ஆகி யவை 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக கருதப்படும் சங்க கால நாகரிகச் சின்னமாக, கீழடி இருப்பது தெரிய வந்து உள்ளது.

இந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வதை தடுத்து நிறுத் தவும், இந்த ஆய்வை மேற் கொள்ள இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கப் பட்டு வந்த நிதியை திடீரென நிறுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதேநேரத்தில், இந்தியா வின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இதுபோன்ற அகழ்வா ராய்ச்சி பணிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வித தடங்கலும் இன்றி தொட ருவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தொல்லியல் துறையால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்த முடிவு அவர்களை பெரும் அதிருப் திக்கும், ஏமாற்றத்துக்கும் உள் ளாக்கி இருக்கின்றது.

மேலும், பழம்பெரும் தமி ழகத்தின் உண்மையான வர லாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழாய்வை சீர்குலைக் கும் முயற்சியில், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு ஈடுபடுகிறதோ என்ற சந்தேக மும் தமிழக மக்களுக்கு ஏற் பட்டுள்ளது. மத்திய தொல் லியல் ஆலோசனைக்குழுவின் ஒருதலைப்பட்சமான, நியாய மற்ற முடிவுகளால், தமிழக மக்களின் உணர்வுகள் எந்த வகையிலும் காயப்படக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள் வீர்கள் என நம்புகிறேன்.

இந்த விவகாரத்தில் உடன டியாக தலையிட்டு, தமிழகத் தின் வரலாற்றையும், கலாச்சா ரத்தையும், பழங்கால நாகரிகத் தையும் கண்டறிய, கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொள்ளவும், அதற்குத் தேவை யான நிதியை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யவும், மத்திய தொல்லி யல் ஆலோசனைக்குழு அனும தியளிக்க உடனே நடவடிக்கை வேண்டும். அப்படி நட வடிக்கை எடுக்கும் பட்சத்தில், தமிழக மக்கள் இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையை என் றைக்கும் நினைவுகூர்வார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner