எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேளாண் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து
கல்வியாளர்கள் குழு அமைத்து விசாரணை நடத்துக!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 8-- வேளாண் மைப் பல்கலைக்கழக முறை கேடுகள் குறித்து சிறந்த கல்வி யாளர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட் சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (7.1.2017) விடுத்துள்ள அறிக் கையில், இந்தியாவிலேயே முதன்முறையாக, தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்றைக்கு அதிமுக ஆட்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் அங்கீகாரத்தை இழந்து நிற் பதைப் பார்த்து மிகுந்த மன வேதனைப்படுகிறேன்.

புகழ்பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் கீழ் 14 கல்லூரிகள், 8 பட்டய படிப்பு நிறுவனங்கள், 39 வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின் றன என்பதும், 13 இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு,

39 முதுகலை அறிவியல் பட்டப் படிப்பு உள்ளிட்ட முதுகலை அறிவியல் முனைவர் பட்டயப் படிப்பு, மற்றும் பகுதி நேர ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் மூலம் வேளாண் கல்வி வழங் குதல் அனைத்தும், தமிழகத் திற்கு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் முக்கியத்து வத்தை உணர்த்துகிறது.

வேளாண் முன்னேற்றத்திற் காக, மகசூல் அதிகரிக்கும் இரகங்கள் பற்றிய ஆராய்ச்சி, சீரான சாகுபடி முறை குறித்த வழி காட்டல், உர மேலாண்மை, களை மற்றும் பூச்சி போன்றவற் றிலிருந்து வேளாண் பயிர்களை மீட்பது, உழவு, விதைப்பு, களையெடுப்பது, அறுவடை செய்வது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தும் இயந்திரங்களை வடிவமைத்தல், வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் என தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன. விவசாயிகள் நலனுக் காக பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் இந்தப் பல்கலைக்கழகம் அங்கீகா ரத்தை இழப்பதற்கு பல கார ணங்கள் பட்டியலிடப்பட்டுள் ளன.

அவை பத்திரிக்கை செய் திகளாகவும் வெளிவந்திருக்கின் றன. அவற்றுள் முக்கியமான முதல் காரணம், இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் விதி முறைகளுக்கு மாறாக பல் கலைக்கழகத்தின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி, அந்த பல்கலையின் கீழ் இயங் கும் கல்லூரி முதல்வர்கள் மற் றும் இயக்குனர்கள் அனைவ ரும் பொறுப்பு அதிகாரிகளா கவே நியமிக்கப்பட்டதும், அடிக் கடி அவர்கள் மாற்றப்பட்டது மாகும். உட்கட்டமைப்பு வசதி கள் ஏதும் இல்லாமல் பல் கலைக்கழகத்தின் கீழ் செயல் படும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது இரண்டாவது காரணமாகும்.

பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மனையியல் கல்லூரி பாடதிட்டத்தை தன்னிச்சை யாக மாற்றியது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டில் இருந்து தன்னிச்சை யாக முதுநிலை மற்றும் முனை வர் பட்டங்களின் பாடதிட் டத்தை இரு பருவமுறையில் இருந்து முப்பருவ முறைக்கு மாற்றியுள்ளது இந்திய ஆராய்ச் சிக் கழகத்தின் விதி களுக்கு முற்றிலும் முரணானது என்ற காரணமாகும்.

இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகா ரம் இரு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 50 அதி முக எம்.பி.க்கள் டில்லியில் இருந்தும், இப்படியொரு அசாதாரண நிலை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு உருவாகியிருக்கிறது என்பதை எண்ணும் போது கவலையளிக் கிறது.

இந்திய அளவில் புகழ் பெற்ற தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்திற்கு இப்படியொரு தலைகுனிவு ஏற்பட்டதற்கு அதிமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண் டும் என்று அழுத்தம் திருத்த மாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தராக நிய மிக்கப்படுவதற்கு தகுதிமிக்க பேராசிரியர்கள் பலர் இருந் தும், இருமுறை கே.ராமசாமி என்பவரை அதிமுக அரசு நிய மித்ததே இந்தப் பல்கலைக்கழக நிர்வாகக் குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

அங்கீகாரம் தொடர்பாக மட் டுமின்றி பல்கலைக்கழக நிர் வாகத்திலும் அதிமுக ஆட்சி யில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்குச் சான்றாக பணி நியமனங்கள், பணியிட மாறுதல்கள், உதவி பேராசிரி யர்கள் நியமனக் குளறுபடிகள், பதிவாளர், டீன், டைரக்டர் போன்ற பதவிகளை நிரப்பா மல், தற்காலிகமாக பொறுப்பு அதிகாரிகளாகவே வைத்தது போன்ற நிர்வாக சீர்குலைவு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டி ருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தின் அங்கீகாரமே நிறுத்தி வைக்கப்படும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிவிட்டது.

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகச் சீர்கேட் டைக் கண்டு அந்தப் பல்கலைக் கழக ஊழியர்களும், விஞ்ஞா னிகளும், மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆனால் முதல் வரும் கண்டு கொள்ளவில்லை. அதிமுக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் கவலைப் படவில்லை. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைகழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரத்தை இரண்டு வரு டங்கள் நிறுத்தி வைத்தது எல்லா வற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சுட்டிக்காட் டியுள்ள குறைகளை உடனடியா கக் களைந்து, தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத் தில் நடைபெறும் முறைகேடு கள், நிர்வாக குளறுபடிகள் போன்றவை குறித்து விசா ரணை செய்ய சிறந்த கல்வியா ளர்கள் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அறிக்கை பெற்று, அதன் மீது உரிய நட வடிக்கை எடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ் வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner