எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குழந்தைகளின் மூளை வளர்ச்சியில்
பாதிப்புகளை ஏற்படுத்தும் இரும்புச் சத்து குறைபாடு

சென்னை, ஜன. 18- குழந்தைகள் மத்தியில் இரும்புச்சத்து குறை பாடு என்பது ஒரு குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதை வலியுறுத் தும் சென்னையைச் சேர்ந்த முக்கிய மருத்துவர்கள், குழந் தைகளின் இரும்புச்சத்து தேவைப்பாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்த பெற்றோர் களை அறிவுறுத்துகின்றனர்.

இரத்தசோகை தவிர்த்து, மூளை வளர்ச்சியில் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு களை இரும்புச்சத்து குறைபாடு உண்டாக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைப்பாடுகளை முழுமை யாக செறிவுட்டப்பட்ட உண வுகள் உடன் ரெடிமேட் வைட் டமின்கள் & மினரல்கள் செறி வுட்டப்பட்ட உணவு, அல்லது செறிவுட்டப்பட்ட தானியங்கள் / உணவுகள் அல்லது இரும்பு / மல்டி-வைட்டமின் சொட்டு கள் துணை உணவு ஆகியவை கள் வழியாக ஈடேற்ற வேண் டும் எனவும் நிபுணர்கள் வலி யுறுத்தியுள்ளனர். இது மேம் பட்ட மூளை செயல்பாடு மற் றும் சிறப்பான படைப்பாற் றலை நீடிக்கச்செய்யும்.

இதுகுறித்து முன்னணி குழந்தை மருத்துவராகவும் மற்றும் இந்திய அரசின், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் (விளிதிபிகீ) தேசிய ஆலோசகரா கவும் தற்போது திகழும் பேராசி ரியர் அருண் சிங் அவர்கள், உடல் ரீதியிலான இரும்புச்சத்து தேவைப்பாடு மிக அதிகளவில் இருக்கும் காலகட்டத்திலும் குழந்தைகளுக்கு அவர்களது அன்றாட உணவுகளில் வழி யாக மிகக்குறைவான அளவே அவைகள் கிடைக்கப்பெறுவ தால், இரண்டிற்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, குழந்தை வயதிலேயே மூளை வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த இடைவெளி காரணமாக நமது குழந்தைகளின் மதிப்புமிக்க  புள்ளிகளை நாம் இழந்து வரு கிறோம். பெரும்பான்மையான சமூகங்கள் மற்றும் பெற்றோர் கள் நாட்டிற்கு உண்டாகும் இந்த பேரிழப்பு குறித்த விழிப் புணர்வை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner