எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எம்ஜிஆர் அஞ்சல் தலை வெளியீட்டு

சென்னை, ஜன. 18- எம்ஜிஆரின் 100ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரின் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி, கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத் தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி தொடங்கியது.

இந்திய அஞ்சல் துறை இயக்குனர் டி.மூர்த்தி, எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்று கொண்டார். இதில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, மாபா பாண்டியராஜன், அன்பழகன், சரோஜா, காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செய லாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அரசுத் துறை அதி காரிகளும் கலந்து கொண்டனர்.


சூரியன் நகர்வை கணிக்கும் 6,000 ஆண்டு பழைமையான கல் சவுக்கை
பழநி அருகே கண்டுபிடிப்பு

பழநி, ஜன. 18- திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாப்பம்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது கொத்தன்கரடு. இங்கு இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 8 டன் எடை கொண்ட மூன்று கற்கள் அடுக்கி வைக்கப் பட்டது போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. தகவலறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த கற்குவியல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய னின் நகர்வை கணிக்க ஏற்படுத்தப்பட்ட சவுக்கை. இடது பக்கத்தில் மூன்று பாறைகளும், வலப்பக்கத்தில் மூன்று பாறைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. மேற்பகுதியில் கற்களால் பலகைக்கோடு ஒன்றும், துவாரமும் அமைக்கப் பட்டுள்ளது. தை ஒன்றாம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள் சூரியன் மறையும் போது இந்த துவாரத்தின் வழியே ஒளி வெளிவரும். ஆடி ஒன்று முதல் ஒருவாரத்திற்கு சூரியன் உதயமாகும் வேளையில், ஒளிக்கதிர்கள் இந்த துவாரம் வழியே வரும்.

தை ஒன்று முதல் 6 மாதம் சூரியன் வடக்கு நோக்கி நகரும். இது உத்தராயணம் எனப்படும். ஆடி ஒன்று முதல் 6 மாதம் தெற்கு நோக்கி நகரும். இது தட்சிணாயணம் எனப் படும். இந்த வடக்கு, தெற்கு நகர்வை கணிக்கும் வானியல் அறிவியல் அப்போதே இருந்துள்ளது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை இந்த அமைப்பின் மூலமே கண்டறிந்து விவசாயம் செய்துள்ளனர். இவ்வளவு அதிக எடையுடைய கற்களை, சிறிய தேங்காய் அளவிலான கல் இன்றளவும் தாங்கிப்பிடித்துள்ளது வியப்பின் உச்சமாக உள்ளது.

பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற வெளிநாடு களிலும் சூரிய நகர்வை கணிக்கும் கல் அமைப்பு உள்ளது. ஆனால் அவை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே உள்ளன. ஆனால் இங்குள்ள அமைப்பு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற அரிய குறியீடு, நினைவுச்சின்னங்களை அழியா மல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.


பொலிவுறு நகரத்திற்கான இலச்சினை:
பொதுமக்கள் தேர்வு செய்ய அழைப்பு

சென்னை, ஜன. 18- சென்னை பொலிவுறு நகரத்துக்காக வடிவமைக்கப்பட்ட இலச்சினையை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை பொலிவுறு நகர நிறுவனத்தின் நிர்வாகக் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆலோசகர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட 7 மாதிரி இலச்சினைகளை பொது மக்களின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்த்திகேயன் மேலும் கூறியதாவது:-

ஜனவரி 21 கடைசி: இலச்சினைகளைத் தெரிவு செய்து ஒன்றாம் தேதி முதல் 7 வரை வரிசைப்படுத்தி வாக்களிக்கவும், மேலும் புதிய சின்னத்தை வடிவமைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜனவரி 21 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-2561 9677 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner