எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாகுபடிக்கான நீரினை பெற்றுத் தராததால் 244 விவசாயிகள் தற்கொலை

மத்திய அரசின் ‘நீட்’ மற்றும் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும்

ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஜன.23 தமிழக அரசு சாகுபடிக்கான நீரினை முறையாகப் பெற்றுத் தராத கொடுமையால் 244 விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காணாதது மற்றும் மத்திய அரசின் ‘நீட்’ மற்றும் புதிய கல்விக் கொள்கையை கண் டித்தும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளுநர் உரையை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

இன்று (23.1.2017) காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்றம் கூடியதும் 2017ஆம் ஆண்டு தொடக்கமாக சட்டப்பேரவயின் முதல் கூட்டத்தில் ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை படித்தார். அதற்கு அனுமதி தராததால் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிநடப்பு குறித்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டமன்றக் கூட்டம் 2-.9.-2016 நடைபெற்று முடிந்த பிறகு தமிழகத்திலே துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட் படாத எந்தப் பிரிவு மக்களும் இல்லை. அந்தப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் விடுத்த போதெல்லாம் கேளாக் காதினராக இருந்த இந்த அரசு, தற்போது வேறு வழியில்லாமல் சட்டமன்றத்தைக் கூட்டி இன்று ஆளுநரின் உரையை அவையில் படிக்க முன் வந்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்திலே என்ன நிலைமை?

244 தமிழக விவசாயிகள்

தற்கொலை

தமிழகமே பற்றி எரிந்து கொண்டி ருக்கின்றது. நேற்றுவரை எடுத்த புள்ளி விவரப்படி இந்த ஆட்சி சாகுபடிக்கான நீரினை முறையாகப் பெற்றுத் தராத கொடுமையினால், 244 தமிழக விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டும், பயிர்கள் கருகிய வேதனையினால் மார டைப்பாலும் மறைந்திருக்கிறார்கள். அது பற்றி இந்த அவையைக் கூட்டவேண்டு மென்று எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் அளித்தது உண்டா? சாவு எண்ணிக்கை 200க்கு மேலான பிறகு தான் மிகக் குறைந்த அள வில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை அந்த விவசாயிகளின் மரணத்தை கேலி செய்கின்ற அளவிலே தான் அமைந்துள்ளது.

அடுத்து மெரினா புரட்சி

தமிழகத்திலே உள்ள மாணவர்களும், இளைஞர்களும் குடும்பம் குடும்பமாக சென்னை கடற்கரையிலே கடந்த ஒரு வார காலமாக இரவுப் பகலாக ‘ஜல்லிக்கட்டு’ முறையாக ஒவ்வொரு ஆண்டும் நடத் தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடிக் கொண்டிருக் கிறார்கள். அந்தப் பிரச்சினையிலே தமிழக அரசு முறையாக நடந்து கொண்டதா? உரிய நேரத்தில் முறைப்படி தமிழக அரசு நடந்து கொண்டிருந்தால், தமிழகத்தின் தலைநகரிலே கடற்கரையே காணாத அளவிற்கு நமது மாணவர்களும், இளை ஞர்களும் திரண்டிருப்பார்களா? இந்த ஆட்சியினர் ஏதோ தற்காலிகமாக செய்து மாணவர்களையும், தமிழ் நாட்டு மக்களை யும் ஏமாற்ற முயற்சித்து, அதிலே பெரும் தோல்வியைக் கண்டிருக்கிறார்கள்.

காவல் துறையோ கட்டுப்பாடற்ற நிலையிலே உள்ளது. ஜல்லிக்கட்டு நடத் தப்பட வேண்டுமென்று அற வழியிலே போராடிய மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதை தொலைக்காட்சிகளிலே நாம் பார்த்திருக்கிறோம். அவர்களில் பலர் இன்னமும் சிறையிலே இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘பீட்டா’ அமைப்புக்கு

உடனடியாகத் தடை

கலாச்சாரத்திற்கு எதிராக - தேச விரோத சக்தியாகச் செயல்படும் ‘பீட்டா’ அமைப்புக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பற்றி தமிழக அரசு எந்த முயற்சியும் இதுவரையில் எடுக்கவில்லை.

கடுமையான தண்ணீர் பஞ்சம்

ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் இறங்குமுகத்தில் இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற் பட்டுள்ளது. எதிர்க் கட்சிகளின் இடை விடாத கோரிக்கைக்கிணங்க, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்த இந்த அரசு, அதற்காக எந்தச் சலுகைகளையும் விவசாயிகளுக்கோ, மற்றப் பிரிவினருக்கோ செய்திட இதுவரை முன்வரவில்லை.

பவானி ஆற்றின் குறுக்கே தேக் குவட்டை என்னும் இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற் கொண்டிருக்கின்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும், இந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழும் பவானி ஆற்றிலிருந்து தமிழகத் திற்குக் கிடைக்கும் தண்ணீரைத் தடுக்கும் கேரள அரசின் முயற்சி இது.  இதை தடுப்பதற்கான முயற்சியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டுமென்ற கோரிக்கையையும் இந்த அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.

நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு கண்டனம்

மத்திய அரசின் நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகமும், மற்றும் தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகளும் எத்தனையோ முறை கோரிக்கைகள் வைத் தும், மத்திய மாநில அரசுகள் அதனைச் செவிமடுக்கத் தயாராக இல்லாத நிலை தான் உள்ளது.

வார்தா புயல்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தாக்கிய வர்தா புயலின் சீற்றத்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டு, பல பேர் உயிரிழக்க நேரிட்ட பிறகும் நிவாரண உதவிகள் எதுவும் முறையாக இதுவரையில் சென்றடையவில்லை.

தமிழ்நாட்டில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் அ.தி.மு.க. ஆட்சி அதை கையாள்வதில் தவறி விட்டது.

மாணவர்கள், இளைஞர்கள், பெற் றோர்கள், குழந்தைகள் என அத்தனை பேரும் வீதிக்கு வந்து போராடி இருக் கிறார்கள். அவசர சட்டம் பிறப்பித்ததை வரவேற்கிறேன். ஆனால் அறப்போராட்டத் தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். இதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

மாணவர்கள் மீது தடியடி

ஆனால் அவர் அதை மாணவர்களிடம் விளக்கி கூறி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது. அதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் இன்று 2 மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். ஆனால்  காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது வேதனையாக உள்ளது. எனவே அரசின் நடவடிக்கை கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

பிரச்சினைகள் எழும் போதெல்லாம் அதற்கு பதில் அளிக்க முன்வராமல் அப் போது சம்பிரதாயத்துக்காக வாசிக்கப்படும் ஆளுநர் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner