எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட அராஜகச் செயல்கள்!
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்!!
தமிழக ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் நேரில் மனு

சென்னை, ஜன.24 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாண வர்களும், இளைஞர்களும் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறி நடத்திய அராஜகச் செயல்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசா ரணை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநரை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் அவர்களை,  நேற்று (23.-1.2-017) கிண்டி, ராஜ்பவனில் நேரில் சந்தித்து அளித்த மனு விவரம் பின் வருமாறு:-

தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கும்  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடை பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 17-ஆம் தேதியிலிருந்து மாணவர்களும், இளைஞர்களும் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியாக அறவழிப் போராட்டத்தை நடத்தி வந் தார்கள். அதன் விளைவாக 1960-ஆம் வரு டத்திய “மிருகவதை தடுப்புச் சட்டத்தில்” திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நேற்றைய தினத்திலிருந்து காவல்துறையினர் செய்த கெடுபிடிகள், இன்று அதிகாலையில் அவர்களை கலைக்க மேற்கொண்ட நட வடிக்கைகள் எல்லாம் மாநிலம் முழு வதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதி களிலும் போராடியவர்கள் மீது கண் மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டு, பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் நிறை வேறிய பிறகும் இன்னும் மாநிலம் முழுவதும் போராட்டக்காரர்கள் கைது, அவர்கள் மீது தடியடி எல்லாம் தொடரு கிறது. மாநிலத்தில் பொது அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்காக எடுக்கப் படும் நடவடிக்கைகள் என்பதை விட காவல்துறையின் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகச் செயல்களாக இருக்கின்றன. மெரினா கடற்கரையே போர்க்களம் போல் காட்சியளிக்கும் அளவிற்கு காவல் துறையினரின் அடக்குமுறையில் ஈடுபட் டிருப்பது கவலையளிக்கிறது.

ஆகவே ஆளுநர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக் கட்டுக்காக போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதை தவிர்க்கவும், இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்து எதிர்காலத்தை பாழ்படுத்தி விடா மல் கைது செய்யப்பட்டவர்கள் அனை வரையும் விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தடியடியில் படுகாயமடைந்துள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மாநில அரசு நிதியுதவியும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தருணத்தில் மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீ ரென்று காவல்துறை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது குறித்து பணியிலி ருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner