எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக சட்டமன்றத்தில்
பேரவை குழுக்களை அமைக்கக்கோரி
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

சென்னை, ஜன. 25- சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக செயல் தலைவரும், எதிர்கட் சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் முடிந்து 6 மாதங்களாகி விட்டது. புதிதாக அமைந்துள்ள அரசு இதுவரை தணிக்கை குழு, நிலைக்குழு, பொதுக் கணக்கு குழு, உரிமைக் குழு, விதிகள் குழு, பொது நிறுவ னங்கள் குழு, அலுவல் ஆய் வுக் குழு உள்ளிட்ட 12 குழுக் களை  அமைக்கவில்லை.

இந்த  குழுக்களை உடனே அமைக்க, சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளருக்கு உயர் நீதிமன் றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந் தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, பேரவை குழுக்களின் பணி மிக முக்கியமானது. ஆனால் புதிய அரசு அக்குழுவை அமைப் பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் காலதாமதம் தொடர்கிறது என்றார்.  அப் போது அரசு தரப்பில் வழக்கு ரைஞர் குமார் ஆஜராகி தன் கருத்து களை தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி ராஜேந்திரன், இந்த வழக்கில் சட்டசபை செயலாளர், அவை முன்னவர்  மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார். அதன்படி இந்த வழக்கு அதே நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  சட்டமன்ற செயலாளர் சார்பாக அரசு தலைமை வழக்குரைஞர் முத்து குமாரசாமி ஆஜராகி, சட்ட மன்றத்தில் 12 குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

விரைவில் அனைத்து குழுக்களையும் அமைத்து விடுவோம். அலுவலர் ஆய்வு குழு உள்பட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள 7 குழுக் களும் விரைவில் அமைக்கப் படும்  என்றார்.

இதை கேட்ட நீதிபதி, மனு தாரர் கோரிக்கை நிறைவேற் றப்படும் என்று  சட்டமன்ற செயலாளர்  தரப்பில் உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை முடித்து வைக்கிறேன் என்றார். உடனே மனுதாரர் திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர்  பி.வில்சன் குறுக்கிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தால் அனைத்து குழுக்களையும் அமைக்கமாட்டார்கள் என்றார். இதை கேட்ட நீதிபதி வழக்கை முடித்து வைக்கிறேன்.

உத்தர வாதத்தின் அடிப்படையில் ஆய்வு குழுக்களை அமைக்கா விட்டால் உடனே நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்யுங் கள். தற்போது இந்த வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner