எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாணவர்கள் மீது தாக்குதல்:
குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன. 26- ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாண வர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாவது விவரம்: ஜல்லிக்கட்டுக் காக அறவழியில் போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மீது அதி கார அத்துமீறல் செய்து கட் டுக்கடங்காத வன்முறையை நிகழ்த்திய தமிழக காவல் துறை யினரின் நியாயமற்ற செயல்பா டுகள் குறித்த விவரங்களைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அமைதியாக போராடி வந்தவர்கள் மீது, யாரும் எதிர் பாராத நேரத்தில், அதிர்ச்சிக் குரிய வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் வன் முறையை கட்டவிழ்த்து, பலப் பிரயோகம் அனைத்தையும் செலுத்தி, அவர்களை அங்கி ருந்து விரட்டியடித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பெண் களை குறிவைத்து தாக்கிய காவலர்கள், அவர்களில் ஒரு வரை கூட விட்டு வைக்கவில்லை.

போராட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தபோது, அதில் காவல்துறையினர் ஏன் தேவையின்றி தலையிட்டு, போராட்டக்காரர்களை தொந் தரவு செய்தனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது.

சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவர்களே ஆட்டோ ரிக்ஷா, மக்கள் வாழ்ந்த குடி சைகள் மீது தீ வைத்து எரிக்கும் காட்சிகள், பொதுமக்களுக்கு சொந்தமான வாகனம் உள் ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் என கற்பனைக்கே எட்டாத செயல் கள் எல்லாம் வீடியோக்களில் காட்சிகளாகப் பதிவாகி உள் ளன. தப்பியோடிய மக்கள் கூட்டத்தின் மீது கருங்கற்களை வீசி எறிந்து கொடூரமாக தாக்கி இருப்பதே காவல் துறையின் மனிதன்மையற்ற, காட்டு மிராண்டித்தனமான செயல் பாடுகளுக்கு சாட்சியாக உள்ளது.

எனவே, சென்னை மாநகர காவல் துறையின் மூலம் சட் டத்துக்கு விரோதமாக, கட்டுக் கடங்காத வன்முறையை அப் பாவி பொதுமக்கள் மீது பிர யோகித்து, ஜனநாயக விரோத மாகச் செல்லும் அதிமுக ஆட்சி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிறுவ வேண்டும். காவல் துறையினர் மேற்கொண்ட வன்முறை அத்துமீறல் குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண் டும் என்று அக்கடிதத்தில் கூறி யுள்ளார்.

தமிழக ஆளுநர் சி.எச்.வித் யாசாகர் ராவ், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலை வர் எச்.எல்.தத்து, மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் டி.மீனாகுமாரி ஆகியோருக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். கடிதத்துடன் வன் முறை காட்சிகள் அடங்கிய 31 குறுந்தகடுகளையும் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner