எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மெரீனாவில் போராட்டம் நடத்த தடை காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன.28- மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் பொழுது போக்குவதற்கும், களைப்பாறு வதற்கும், விடுமுறை தினங் களை மகிழ்ச்சியாக கொண்டா டுவதற்கும் ஏற்ற இடமாக மெரீனா கடற்கரை விளங்கு கிறது.

இதனால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, மாநகரின் முக்கிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை உள்ளது. இந்த நிலையில், அண்மையில் மெரீ னாவில் ஏற்பட்ட போராட்டம் மக்களுக்கும், போக்குவரத் துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காவல் துறையினர் கூறியதாவது:-

பல்வேறு பிரச்னைகளுக் காக, மெரீனாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அண்மையில் தகவல்கள் பரப் பப்பட்டு வருகின்றன. இது போன்ற தவறான செய்திகளை இளைஞர்கள் நம்ப வேண்டாம்.

அரசியல் கட்சிகள், அமைப் புகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்த வேண் டுமானால் அதற்குரிய அனும தியை காவல் துறையினரிடம் முன்கூட்டியே பெற வேண்டி யது அவசியம். அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்க ளுக்காக, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.

கடற்கரையில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பகுதிக ளில் எந்த விதமான போராட் டமும் இனி நடத்தக் கூடாது. அதை மீறி போராட்டம் நடத்து வோர் மீதும், சமூக வலை தளங்களில் சட்டத்துக்கு புறம் பான தகவல்களை பரப்புவோர் மீதும் சட்டரீதியாக கடுமை யான நடவடிக்கைகள் எடுக்கப் படும். இதற்காக அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner