எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையா? திமுக கண்டன பொதுக் கூட்டம்

முத்தூர், ஜன.29 கேரளா அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்தும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கேரளா அரசின் இச்செயல்பாட்டை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தி.மு.க.  சார்பில் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் கண்டனப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன்,

வெள்ளகோவில் ஒன்றிய திமுக செயலாளர் கே.பாலசுப்பிரமணி, நகர செயலாளர் முத்துக்குமார், முத்தூர் பேரூர் கழக செயலாளர் மு.க. அப்பு,வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ் உள்ளிட்ட தி.மு.கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட அனைத்து அணியினரும் திரளாகப்பங்கேற்றனர்.(28.01.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner