எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டமன்றத்தில் இன்று...

144 தடை உத்தரவை விலக்குங்கள்  

சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தல்

சென்னை, ஜன.30 தமிழக சட்ட சபை இன்று (30.1.2017) காலை கூடியது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் ப.தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனையடுத்து இரண்டு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

பின்னர் கேள்வி நேரத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார் அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீண்டாமை உறுதி மொழி எடுத்துக் கொள்வதற்காக அரை மணிநேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய உடன் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் காவல்துறை அமல் படுத்தி உள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களில் கூறியதற்கும், முதல்வர் அளித்த விளக்கத்திற்கும் முரண்பாடு உள்ளது என்று கூறினார். காவல்துறை அதிகாரி சீருடையில் எப்படி ஊடகங்களில் பங்கேற்கலாம்? என்று கேள்வி எழுப்பிய மு.க. ஸ்டாலின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் 'மு.க.ஸ்டாலின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப் படும்' என உறுதி அளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner