எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியா முழுவதும் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு - மண்ணுக்குரியவர்கள் விரட்டப்படும் அவலம்

இன அடையாள அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் ‘ஜோக்கர்’ திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன்  உரை

சென்னை, பிப்.1-  இந்தியா முழுவதும் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, மண்ணுக்குரியவர்கள் விரட்டப்பட்டு, இன அடையாள அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது   என்றார் ‘ஜோக்கர்’ திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அவர்கள்.

15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திரா விடர் திருநாள் பொங்கல் விழாவில் ‘ஜோக்கர்’ திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அவர்கள் உரையாற்றினார்.

தோழர்களுக்கு வணக்கம்!

வேறு எந்த விருதுமே தர முடியாத பெரும் பெருமித உணர்ச்சியை ஆசிரியர் கையால் வாங்கிய இந்தப் பெரியார் விருது எனக்கு அளித்திருக்கிறது.

என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்

‘ஜோக்கர்’ திரைப்படம் எடுப்பதற்குப் முன்னால் ஏற்படக் கூடிய நெருக்கடிகளும், வலிகளும் - இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்கும் ஒருவனுக்கு எப்படி இருக்கும் என்பது திரைத் துறையில் இருக்கும் சத்யராஜ் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதுபோன்ற ஒரு படத்தை பணம் போட்டு எடுப்பதற்கான தயாரிப்பாளர்களைப் பிடித்து, அந்தப் படத்தை தணிக்கைக் குழுவிடம் இருந்து பெற்று, திரை யரங்கிற்கு எடுத்து வந்து, வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும்வரை இருந்த பெரும் துயரம் - இந்த விருது பெற்ற கணம் என்னை விட்டு அகன்று விட்டது.

இந்த விருதினை எனக்கு அளித்த வீரமணி அய்யா அவர்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

காரணம் என்னவென்றால், ஜோக்கர் திரைப்படம் எடுத்த பிறகு, அந்தப் படம் திரையரங்கிற்கு வந்த பிறகு, நிறைய பேர் கேட்ட கேள்வி, இந்தத் துணிவு, இந்த தைரியம் எங் கிருந்து வந்தது என்பதுதான்.

துணிவும், தைரியமும் பெரியாரிடமிருந்துதான் வந்தது

அதற்கு நான் சொன்ன பதில், இது தைரியம் அல்ல; அக்கறை என்று சொன்னேன்.

அப்படி, உண்மையிலேயே அது துணிவாக இருந்தால், அந்தத் துணிவும், தைரியமும் பெரியாரிடமிருந்துதான் வந்தது.

ஈடு இணையற்ற

பெரியாரின் குரலை தனது முழக்கமாக...

'மானமும், அறிவும் மனிதருக்கு அழகு' என்ற இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெரியாரின் குரலை தனது முழக்கமாக, எங்களுக்கான வழித்தோன்றலாக, நம்பிக்கையை விதைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கும் அய்யா வீரமணி அவர்களிடமிருந்து வந்தது.

இந்தத் திரைத்துறையில் ஒலிக்கக்கூடிய இந்த அரசியல் குரலை, பெரியார் அய்யா அவர்கள் சொல்லியதைப்போல,

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமூகத்தை - உலகின் மற்ற சமூகத்தினரைப்போல, மரியாதைக்குரிய மானமிகு சமுதாயமாக மாற்றுவதற்கான பணியை எனது பணியாகக் கொண்டிருப்பவன் இதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா? என்று கேட்டால், இதை எடுத்து செய்ய யாரும் முன்வராததால், நான் இதை செய்துகொண்டிருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு பற்றில்லை என்று’’ பெரியார் சொன்னதைப்போல,

சம கால அரசியலை, பகுத்தறிவுக் குரலை, மக்களுக்கான அரசியல் குரலை, ஜனநாயகத்தின் உண்மையான குரலை - திரைத்துறையில் பேசுவதற்கே தயங்குகிற சூழலில், அதனை எடுத்துச் சொல்வதை தனது கடமையாக கொண்டிருக்கின்ற எங்கள் முன்னோடி சத்யராஜ் சார் அவர்கள் கொடுத்த தைரியம்.

தந்தை பெரியாரின் குரல்தான்

எம்.ஆர்.இராதா அவர்களிலிருந்து, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திலிருந்து, மணிவண்ணன் அவர்களிலிருந்து, சத்யராஜ் அவர்கள்வரை அத்தனை பேரும் ஒலித்த அரசியல் குரல் - பெரியாரின் குரல்தான்.

இந்த விருது பெறக்கூடிய இந்தக் காலகட்டம் - மிக முக்கியமான ஒரு காலகட்டம் என்று நான் கருதுகிறேன்.

கடந்த ஆறு மாதமாக, ‘ஜோக்கர்’ திரைப்படம் வெளிவந்த பிறகு  மூன்று மாதங்களாக  - விவசாயம் குறித்த ஒரு விவர ணப் படம் எடுக்கின்ற பணியில் நான் இருக்கிறேன். அது அரசு சார்ந்த ஒரு வேலை. அரசுக்கு அளிப்பதற்காக செய்யக் கூடிய பணி. ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசுக்கு அளிப்பது - முழுவதுமாக எடுத்து மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். அதனை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழுவாக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பணி. இப்பொழுது அது தீவிரமாக செய் யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்.

விவசாயம் குறித்தான பயணம்

அதற்காக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் - அதாவது விவசாயம் குறித்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது. வெவ்வேறு பணிகள் இருந்தாலும் எனக்கு, மாதத்தில் 15 நாள்களை அதற்காக ஒதுக்கி செய்து கொண்டிருக்கிறேன். அப்படி நான் பயணம் மேற்கொள்ளும் பொழுது, இரண்டு விஷயங்கள் எனக்குத் தெரிந்தது.

சம காலத்தில் இரண்டு முக்கியமான சவால்களை நமது தமிழகமும், தேசத்திலுள்ள மற்ற மாநிலங்களும் எதிர்கொள் கின்றன.

ஒன்று, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது. இந்தியா முழுவதும், அந்த மண்ணுக்குரியவர்கள் விரட்டப்பட்டு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இரண்டாவது, இன அழிப்பு - இன அடையாள அழிப்பு.

இவை இரண்டையும், இப்பொழுது இருக்கக்கூடிய மத்திய அரசு - எந்த அரசாக இருந்தாலும் சரி - எல்லாமே ஒன்றுதான் எனக்கு.

விவசாயம் என்பது முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு இருக்கிறது

ஏற்கெனவே இருந்த அரசிலும் செய்து கொண்டிருந்தார் கள்; இப்பொழுது உள்ள அரசு மிகத் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் தொடங்கி, இந்தியா முழுவதும் ஏரிகள், குளங்கள், நீர் நிலை கள் அத்தனையும் அழிக்கப்பட்டு இருக்கின்றன, முதலாளி களால். விவசாயம் என்பது முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு இருக்கிறது.

விவசாயம் குறித்து அளிக்கப்படுகின்ற எல்லா புள்ளி விவ ரங்களும், அரசு சார்பில் அளிக்கப்படும் அத்தனைப் புள்ளி விவரங்களும் பொய்.

இந்தச் சூழலில், ஒரு சாமியார் டில்லியில் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். யமுனை நதியிலிருந்து மிகப்பெரிய அள வில் தண்ணீர் எடுத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, இந்தியத் தலைநகரில், அத்தனை தீர்ப்புகளையும் உடைத்துவிட்டு, ஒரு விழாவினை நடத்த முடிகிறது ஒரு சாமியாரால்.

6 சதவிகிதத்தை ஒரு சாமியாரால் கைப்பற்றப்பட முடிகிறது

இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில், உணவுப் பொருள் களின் உற்பத்தியிலும், வியாபாரத்திலும் 6 சதவிகிதத்தை ஒரு சாமியாரால் கைப்பற்றப்பட முடிகிறது.

6 சதவிகிதம் என்பது இந்திய வியாபாரத்தில் மிகப்பெரிய பங்கு. பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம். அதனை ஒரு சாமியாரால் செய்ய முடிகிறது. இந்த வாய்ப்பு ஒரு உள்ளூர் வியாபாரிக்குக் கிடைக்குமா?

உள்ளூர் வியாபாரிகள் அத்துணை பேரும் துடைத் தெறியப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அம்பானியோ, பாபா ராம்தேவோதான் இந்தியாவை ஆட்சி செய்துகொண் டிருப்பது.

வீரமணி போன்றவர்கள்

இல்லை என்றால்

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், வீரமணி அய்யா போன்றவர்கள் இல்லை என்றால், இந்த இனத்தையும், நிலத்தையும் என்றைக்கோ புதைத்திருப்பார்கள்.

ஒரு காவலனாக இம்மாதிரியான தலைவர்கள் இருப்பதால் தான், இன்னமும் நம் வரலாறு நம்மிடம் இருக்கிறது.

கலை ரீதியாக செய்யக்கூடிய

அத்துணை பணிகளிலும்

இதுபோன்ற பொங்கல் விழாவில், இதுபோன்ற விழாவில் நான் விருது பெறுவதை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். அய்யா பிரின்சு கஜேந்திர பாபு அவர்கள் சொல்லியதுபோல, இந்த விருதுக்கு முற்றிலும் தகுதி இல்லாதவன் நான். இந்த விருதை எனக்கு அளித்த பிறகு, எனக்குத் தோன்றிய விஷயம் ஒன்றுதான். இனி, நான் செய்யக்கூடிய, கலை ரீதியாக செய்யக்கூடிய அத்துணை பணிகளிலும் மக்களுக்கான அரசியலையும், அய்யாவின் குரலையும், பெரியாரின் குரலையும், பொதுவுடைமையின் குரலையும் என்னால் முடிந்த அளவிற்கு எடுத்துச் செல்வேன் என்று கூறிக்கொண்டு,

அத்துணைத் தோழர்களுக்கும், மேடையில் இருக்கக் கூடிய சக படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகளும், பிரியங் களும், நன்றிகளும்!

வணக்கம்!

- இவ்வாறு ‘ஜோக்கர்’ திரைப்பட இயக்குநர் ராஜ்முருகன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner