எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் மூலமாக

மாநிலத்திற்குரிய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்குத் தகுதியில்லை என்கிறது - அதனை நாம் ஏற்கப் போகிறோமா?

திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு  உரை

சென்னை, பிப். 2- இன்று மத்திய அரசு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் மூலமாக உன் மாநிலத்திற்குப் பாடத் திட்டத்தை உருவாக்குவதற்குத் தகுதியில்லை என்று சொல்கிறது. அதனை நாம் ஏற்கப் போகிறோமா? என்றார் பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள்.

15.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்சு கஜேந்திரபாபு  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக...

தந்தை பெரியாரின் பெயரில் ஒரு விருது - அந்த விருதை திராவிடர் கழகத்தினுடைய - தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக இன்று எங்களுக்கு வழங்கியிருக்கிறார் கள்.

இந்த அவையினுடைய தலைவர் அவர்களுக்கும், ஆசிரி யர் அவர்களுக்கும், இங்கே கூடியிருக்கக்கூடிய சான்றோருக் கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளபடியே இந்த விருதுக்கு நான் தகுதி பெற்றவனா? என்பது இந்த நிமிடம்வரை எனக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சந்தேகம்.

என்னை தகுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆசிரியர் அவர்கள் இந்த விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய உணர்வு.

பெரியார் பெயரை உச்சரிக்கக்கூட

எனக்குத் தகுதி இருக்கிறதா?

காரணம், பெரியார் பெயரை உச்சரிக்கக்கூட எனக்குத் தகுதி இருக்கிறதா? அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிப் பதற்குக்கூட எனக்குத் தகுதி இருக்கிறதா? என்றுகூட பல நாள்கள் நான் யோசித்ததுண்டு.

ஒரு மிகப்பெரிய மோசடியை அரசு மத்தியிலே உள்ள ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. எதிரி நேருக்கு நேராக இல்லை. கல்விக் கொள்கை ஒன்றை அறிவிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டு, மத்திய இடைநிலை பள்ளி வாரியத்தின் சார்பாக, அதனுடைய கவர்னிங் கவுன்சிலில் ஒரு முடி வெடுத்து, மாநிலங்களின் மீது திணிக்கக்கூடிய ஏற்பாடு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ உயிரோடு இருந்திருந்தால், இன்று களம் இறங்கி அந்த அறிக்கைகளை தெருவில் போட்டு கொளுத்தியிருப்பார்கள் அல்லவா! அதை செய்யத் துணிவில்லாத எனக்கு, பெரியார் பெயரை உச்சரிக் கக்கூட தகுதி இருக்கிறதா? என்கிற சந்தேகம் உண்டு.

காரணம் என்னவென்றால், அந்த 43 பக்க ஆவணம்; அதனை இன்னும் கைகளில் வைத்துக்கொண்டு பேசுகிறார் கள். இன்னும் அந்த ஆவணம் வலைதளத்தில் இருக்கிறது.

அந்த ஆவணத்தினுடைய பத்தாவது பக்கத்தில் சொல் கிறார்கள்,

General category and OBC performed better than SC, ST.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த குழந்தைகளைவிட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பிற மக்களுடைய கற்றல் திறன் வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது என்று, ஜாதியின் அடிப்படையில் 70 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகுகூட, ஓர் அரசுக்குச் சொல்ல துணிவு இருக்கிறது என்று சொன் னால், அதை ஜீரணித்து வாழ்கின்றோமே என்கிற வேதனை ஒரு பக்கத்தில் நமக்கு இருக்கத்தான் செய்கிறது.

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து போனார்கள்; 500, 1000 ரூபாய் பணம் இல்லாமல், கரும்பு வாங்க முடியாமல், பல குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் அதனைப்பற்றி பேசாமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டதே, அதுதான் ஜல்லிக்கட்டில் அவர்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றி.

பார்ப்பனிய சூழ்ச்சி

கரும்பு வாங்க காசில்லை என்று தவிக்கின்றவனைப் பற்றியும், வயலிலே கருகிய நெற்பயிரைக் கண்டு செத்துப் போனவர்களைப்பற்றியும் பேசுவதற்கான வாய்ப்பை ஏற் படுத்தாமல் பார்த்துக் கொண்டதுதான் பார்ப்பனிய சூழ்ச்சி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, நம்மை சூழ்ந்திருப்பது என்பது, ஓர் இனத்தை அழிப்பதற்கான ஓர் அரசு என்பதை நாம் உணரவேண்டும். அதனை உணர்த்தத்தான், இந்த விருது எனக்குக் கொடுத் திருப்பதாக நான் நினைக்கின்றேன்.

மத்திய அரசு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் மூலமாக...

இனத்தை அழிப்பது என்பது பண்பாட்டை அழிப்பது. பண்பாட்டை அழிப்பதற்கு சிறிய ஆயுதம்தான் மொழி. எனவே, இன்று மத்திய அரசு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் மூமலாக உன் மாநிலத்திற்குப் பாடத் திட்டத்தை உருவாக்குவ தற்குத் தகுதியில்லை என்று சொல்கிறது. அதனை நாம் ஏற்கப் போகிறோமா?

உன் மொழியில் நீ கற்பதற்குத் தகுதியற்றவன். அப்படியிருந்தால், அகில இந்திய அளவிற்கு வர முடியாது என்று சொல்கிறது. ஒரு தேர்வை மட்டும் மாநில மொழியில் நடத்திவிட்டால் போதுமா? அதிலும் பட்டியலில் உள்ள 22 மொழிகளிலும் தேர்வை நடத்தப் போவதில்லை அவர்கள்.

தமிழ்நாட்டிற்கு மட்டுமான போராட்டமல்ல...

இந்தப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டிற்கு மட்டுமான போராட்டமல்ல. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழி வாரி இனங்களுக்கும் சேர்த்த போராட்டம்தான், நாம் இங்கே நடத்தக்கூடிய போராட்டம்.

அப்படிப்பட்ட போராட்டத்தை இன்னும் வீரியத்துடன், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் இணைப்பதுபோல, இந்தப் படங்களை நான் பார்க்கிறேன்.

கே.ஏ.குணசேகரனையும், கவிஞர் இன்குலாப்பையும், பேராசிரியர் அவர்களையும் இணைத்துப் பார்க்கையில், எனக்குத் தோன்றுவதெல்லாம், பெரியாரும், அம்பேத்கர் அவர்களும் இணைந்து செயல்பட்டார்களே, அதேபோல, இன்றும் இருக்கிறோம் என்பதை ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழகமும் இந்தப் படத்திறப்பின் மூலமாக நிரூபித் திருப்பதை எங்களால் உணர முடிகிறது.

முன்பைவிட வீரியத்தோடு செயல்படுவதற்கு இந்த விருது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது

எனவே, உங்களுடைய உணர்வுக்கும், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கும் தகுந்தாற்போல், பகுத்தறிவு கொள்கை களை, பொதுவுடைமை கொள்கைகளை - பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய கொள்கைகளை மக்களிடம் முன் னெடுத்துச் செல்வதில், முன்பைவிட வீரியத்தோடு செயல் படுவதற்கு இந்த விருது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

அந்த வகையில், இந்த விருதினை அளித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச்செயலாளர் பிரின்சு கஜேந்திரபாபு அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner